×

கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் ரூ.23 கோடியில் திட்ட பணிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஜி.கே.எம் காலனி 27வது தெருவில் உள்ள சென்னை ஆரம்பப் பள்ளிக்கு சென்னை மாநகராட்சி மேயர் நிதியிலிருந்து ரூ.84 லட்சம் மதிப்பீட்டில் இரண்டாம் தளம் கட்டும் பணி, ஜி.கே.எம். காலனி 25வது தெருவில் சென்னை மாநகராட்சி மூலதன நிதியிலிருந்து மழையினால் பாதிக்கப்பட்ட கொளத்தூர் பகுதியில் 17 தெருக்களுக்கு 5 சிப்பங்களாக ரூ.17 கோடியே 83 லட்சம் மதிப்பீட்டில் புதிய மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணி, ஜி.கே.எம் காலனி 12வது தெருவில் அமைந்துள்ள பழைய பெருநகர சென்னை மாநகராட்சி ஆரம்பப் பள்ளியை இடித்துவிட்டு சிங்கார சென்னை 2.0 நிதியின் மூலம் ரூ.2.43 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தரை தளம் மற்றும் முதல் தளம் கட்டும் பணி,

சென்னை மாநகராட்சி ஆரம்பப் பள்ளியில் பி.வில்சன் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.1.80 கோடி மதிப்பீட்டில் இரண்டாம் தளம் மற்றும் பள்ளியை மேம்படுத்தும் பணி, சென்னை மாநகராட்சி பள்ளி சாலையில் உள்ள மாநகராட்சி மேல்நிலை பள்ளி, திருவீதியம்மன் கோயில் தெருவில் உள்ள மாநகராட்சி ஆரம்பப் பள்ளி, கே.சி கார்டன் பகுதியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளி, சோமையா தெருவில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளி, ரங்கசாய் தெருவில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளி மற்றும் கபிலர் தெருவில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் சிறப்பு அமைப்புகளுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கும் பணிகள் என மொத்தம் ரூ.23 கோடி மதிப்பீட்டிலான புதிய திட்டப் பணிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று அடிக்கல் நாட்டினார்.

The post கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் ரூ.23 கோடியில் திட்ட பணிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Kolathur Assembly Constituency ,Chief Minister ,M.K.Stalin ,Chennai ,GKM Colony ,Chennai Primary School ,27th Street ,Corporation ,
× RELATED தமிழ் வளர்ச்சித் திட்டங்கள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு