- முதலமைச்சர் எம்சி
- சென்னை-ஹைதராபாத் ஐபிஎல் போட்டியில்
- செபாக் ஸ்டாலின்
- சென்னை
- முதலமைச்சர் முதல்வர்
- க்ஸ்டாலின்
- சேப்பாக்கம்
- முதல் அமைச்சர்
- கி.மு.
சென்னை: சென்னை- ஐதராபாத் ஐபிஎல் போட்டியை காண முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சேப்பாக்கம் வருகை தந்துள்ளார். அவருடன் அமைச்சர் உதயநிதி, மனைவி துர்கா ஸ்டாலினுடன் வருகை தந்து போட்டியை கண்டு ரசிக்கின்றனர். 16-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. போட்டி தொடரில் இன்று (21.04.2023) இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெறும் 29-வது லீக் ஆட்டத்தில் சென்னை அணியும் ஐதராபாத் அணியும் எதிர்கொள்கிறது.
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இந்த நிலையில், ஐதராபாத் அணி 15 ஓவர்களில் 102 ரன்கள், 5 விக்கெட் இழப்புக்கு அடிவருகிறது. சென்னை-ஐதராபாத் இடையிலான போட்டியை காண முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சேப்பாக்கம் மைதானத்திற்கு வருகை தந்துள்ளார்.
The post சென்னை- ஐதராபாத் ஐபிஎல் போட்டியை காண முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சேப்பாக்கம் வருகை! appeared first on Dinakaran.
