×

நேபாள ஜனாதிபதி சீரியஸ்: டெல்லி எய்ம்சுக்கு மாற்றம்

காத்மாண்டு: நேபாள ஜனாதிபதி ராமச்சந்திர பவுடெலுக்கு (78) கடந்த சில வாரங்களுக்கு முன் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் காத்மாண்டு அடுத்த மகாராஜ்கஞ்சில் உள்ள போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவரது உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாததால், அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

காத்மாண்டு மருத்துவமனையின் நிர்வாகத் தலைவர் பைகுந்த் தப்லியா கூறுகையில், ‘ஜனாதிபதிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. அவரது ஆக்ஸிஜன் அளவு குறைந்ததால் வேறொரு மருத்துவமனைக்கு பரிந்துரைத்துள்ளோம். கடந்த 15 நாட்களாக ஆன்டிபயாடிக் மருந்துகளை எடுத்துக் கொண்ட போதிலும், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை’ என்றார்.

The post நேபாள ஜனாதிபதி சீரியஸ்: டெல்லி எய்ம்சுக்கு மாற்றம் appeared first on Dinakaran.

Tags : Nepal ,Kathmandu ,President ,Ramachandra Powdel ,Delhi ,
× RELATED நேபாள துணை பிரதமர் உபேந்திரா ராஜினாமா