×

இளம்பெண் மாயம்

உளுந்தூர்பேட்டை, ஏப். 19: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே அஜீஸ் நகர் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (34). இவருக்கு கடந்த 2018ம் ஆண்டு மேனகா (26) என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இதில் இவர்களுக்கு குழந்தை ஏதும் இல்லாத நிலையில் கடந்த 3 மாத காலமாக தனது தாய் வீட்டில் இருந்தவர் சம்பவத்தன்று கணவர் வீட்டுக்கு செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு சென்றவர், அதன்பிறகு காணவில்லை. உறவினர் வீடு உள்ளிட்ட பல இடங்களில் தேடிப்பார்த்தும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து எடைக்கல் காவல்நிலையத்தில் வெங்கடேசன் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சுகன்யா வழக்குப்பதிந்து மேனகாவை தேடி வருகிறார்.

The post இளம்பெண் மாயம் appeared first on Dinakaran.

Tags : Ulundurpet ,Venkatesan ,Aziz Nagar ,Ulundurpet, Kallakurichi district ,
× RELATED மாற்றுத்திறனாளி சிறுமியை பாலியல்...