×

(தி.மலை) துரிஞ்சாபுரம் மக்களுக்கு நூறு நாள் வேலை வழங்க வேண்டும்கலெக்டரிடம் மனுதிருவண்ணாமலையில் வாராந்திர குறைதீர்வு கூட்டம்

திருவண்ணாமலை, ஏப்.18: திருவண்ணாமலையில் நடந்த வாராந்திர குறைதீர்வு கூட்டத்தில் நூறு நாள் வேலைத்திட்டத்தில் வேலை வழங்கக்கோரி கிராம மக்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர். திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் பா.முருகேஷ் தலைமையில் நேற்று நடந்தது. கூடுதல் கலெக்டர் வீர்பிரதாப்சிங், ஆர்டிஓ மந்தாகினி உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில், முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள், பட்டா மாற்றம், சுய வேலைவாய்ப்பு கடனுதவி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 428 பேர் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

சுட்டெரிக்கும் கோடை வெயிலையும் பொருட்படுத்தாமல், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் வந்திருந்தனர். மேலும், ஆரணி மற்றும் செய்யாறு ஆர்டிஓ அலுவலகங்களில் குறைதீர்வு கூட்டம் நடைபெறுகிறது. ஆனாலும், அந்த பகுதிகளைச் சேர்ந்தவர்களும் கலெக்டரிடம் மனு அளிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் இங்கு வருகின்றனர். எனவே, நேற்றும் குறைதீர்வு கூட்டத்தில் மக்கள் வருகை அதிகரித்திருந்தது. இந்நிலையில், போளூர் தாலுகா, படவேடு அடுத்த பெருமாள்பேட்டை, துரிஞ்சாபுரம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள், தங்களுக்கு நூறு நாள் வேலை வழங்கக்ேகாரி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

மேலும், கடந்த ஒரு ஆண்டாக தங்களுடைய கிராமத்ைதச் சேர்ந்தவர்களுக்கு நூறு நாள் வேலை வழங்கவில்லை என மனுவில் தெரிவித்துள்ளனர். அதோடு, படவேடு ஊராட்சியில் இடம் பெற்றுள்ள குக்கிராமங்களுக்கு, சுழற்சி முறையில் நூறு நாள் வேலையை பகிர்ந்து அளிக்க வேண்டும், அதனை நம்பியே தங்களுடைய வாழ்வாதாரம் இருக்கிறது என குறிப்பிட்டுள்ளனர். இந்நிலையில், கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் குறைதீர்வு கூட்டத்தின்போது, பொதுமக்கள் திடீரென தீக்குளிக்க முயற்சிக்கும் சம்பவங்கள் நடைபெறாமல் தவிர்க்க, கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் கூடுதல் போலீஸ் போடப்பட்டிருந்தது. பொதுமக்கள் கொண்டுசென்ற பொருட்கள், பைகளை சோதித்த பிறகே அலுவலகத்துக்குள் அனுமதித்தனர்.

பெட்டிச் செய்தி: குடிநீர் வசதி செய்யப்படுமா?
திருவண்ணாமலையில் 100 டிகிரியை கடந்து வெயில் சுட்டெரிக்கிறது. அதனால், கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்வு கூட்டத்தில் மனு அளிக்கவரும் பொதுமக்கள் தாகத்தில் தவிக்கும் நிலை ஏற்படுகிறது. நீண்ட தூரம் பயணித்து, பல மணி நேரம் காத்திருந்து கலெக்டரிடம் மனு அளிப்பதற்குள் பகல் 1 மணியை கடந்து விடுகிறது. எனவே, பொதுமக்கள் தாகத்தை தணிக்க, அங்குள்ள கடைகளுக்கு சென்று குடிநீர் பாட்டில்களை வாங்கி பயன்படுத்தும் நிலை உள்ளது. எனவே, கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்களின் தாகத்தை தீர்க்க, பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதியை செய்துத்தர வேண்டும். மேலும், திங்கள் கிழமைதோறும் தன்னார்வலர்கள் மூலம் மோர் வழங்கவும் முயற்சிக்கலாம் என்பது அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.

The post (தி.மலை) துரிஞ்சாபுரம் மக்களுக்கு நூறு நாள் வேலை வழங்க வேண்டும்
கலெக்டரிடம் மனு
திருவண்ணாமலையில் வாராந்திர குறைதீர்வு கூட்டம்
appeared first on Dinakaran.

Tags : T.Malai ,Manuthiruvannamalai ,Durinchapuram ,Thiruvannamalai ,
× RELATED வேலூர், தி.மலை, திருப்பத்தூரில் கொட்டி...