
மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரை திருவிழா வரும் 23ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி மே 4ம் தேதி வரைநடக்கிறது. விழாவில் முக்கிய உற்சவமான மீனாட்சியம்மன் – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் மே 2ம் தேதி தேதி காலை 8.30 மணி முதல் 8.59 மணிக்குள் நடக்கிறது. இதனை நேரடியாக காண ரூ.200, ரூ.500 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கட்டணமில்லா தரிசனமும் உண்டு. திருக்கல்யாணத்தை நேரடியாக காண அறநிலையத்துறை இணையதளமான hrce.tn.gov.in, maduraimeenakshi.hrce.tn.gov.in ஆகியவற்றில் வரும் 22ம் தேதி முதல் 25ம் தேதி இரவு 9 மணி வரை, ஆன்லைன் மூலம் கட்டணச்சீட்டு முன்பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
The post மே 2ல் மீனாட்சி திருக்கல்யாணம்: ஏப்.22 முதல் டிக்கெட் முன்பதிவு appeared first on Dinakaran.
