×

மழைநீர் வடிகால் கட்டுமான பணிகள்

கோவை, ஏப்.14: கோவை மாநகராட்சி 55ம் வார்டுக்கு உட்பட்ட நீலிக்கோணம்பாளையம் கருணாநிதி நகரில் ரூ.24.80 லட்சம் மதிப்பில் 180 மீட்டர் தொலைவிற்கு மழைநீர் வடிகால் கட்டுமானப்பணியை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் பூமி பூஜை செய்து பணியினை துவக்கி வைத்தார். இதையடுத்து, 54ம் வார்டுக்கு உட்பட்ட நீலிக்கோணாம்பாளையம் பகுதியில் நேரில் ஆய்வு செய்த மேயர் கல்பனா ஆனந்தகுமார் அப்பகுதியில் உள்ள மழைநீர் வடிகாலை தூர்வாரவும், அங்குள்ள பழுதடைந்த மாநகராட்சி பொதுக் கழிப்பிடத்தை புனரமைக்க உரிய திட்ட மதிப்பீடு தயாரிக்க சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக். கவுன்சிலர்கள் தர்மராஜ், உதவி கமிஷனர் முத்து ராமலிங்கம், உதவி செயற்பொறியாளர் சுந்தர்ராஜன், முன்னாள் மண்டல குழுத் தலைவர் சாமி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

The post மழைநீர் வடிகால் கட்டுமான பணிகள் appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Nilikonampalayam Karunanidhi Nagar ,Coimbatore Corporation ,Dinakaran ,
× RELATED கோவை மாநகராட்சி எல்லையை விரிவுப்படுத்த ஈஸ்வரன் எம்.எல்.ஏ. கோரிக்கை..!!