×

பவர்கிரிட் நிறுவனத்தில் 138 இடங்கள் : பி.இ., படித்தவர்களுக்கு வாய்ப்பு

ஒன்றிய பொதுத்துறையைச் சேர்ந்த மின் பகிர்மான கழகமாக பவர்கிரிட் நிறுவனத்தில் 138 இன்ஜினியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. பி.இ., படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: Engineer Trainee. மொத்த காலியிடங்கள்: 138.
சம்பளம்: ரூ.50,000-1,60,000.
வயது: 31.12.2022 தேதியின்படி 28க்குள்.

பாட வாரியாக காலியிடங்கள் விவரம்:

அ. எலக்ட்ரிக்கல்: 83 இடங்கள் (பொது-35, ஒபிசி-21, எஸ்சி-12, எஸ்டி-8, பொருளாதார பிற்பட்டோர்-7).
ஆ. சிவில்: 20 இடங்கள் (பொது-8, ஒபிசி-5, எஸ்சி-3, எஸ்டி-2, பொருளாதார பிற்பட்டோர்-2)
இ. எலக்ட்ரானிக்ஸ்: 20 இடங்கள் (பொது-8, ஒபிசி-5, எஸ்சி-3, எஸ்டி-2, பொருளாதார பிற்பட்டோர்-2)
ஈ. கம்ப்யூட்டர் சயின்ஸ்: 15 இடங்கள் (பொது-7, ஒபிசி-4, எஸ்சி-2, எஸ்டி-1, பொருளாதார பிற்பட்டோர்-1)

தகுதி: எலக்ட்ரிக்கல்/எலக்ட்ரானிக்ஸ்/சிவில்/ கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய பாடங்கள் அல்லது அதற்கு இணையான பாடங்களில் ஏதாவது ஒன்றில் 60% மதிப்பெண்களுடன் பி.இ.,/பிடெக்.,

கட்டணம்: ரூ.500/-. இதை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/மாற்றுத் திறனாளிகள்/ முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் கிடையாது.

கேட்-2023 தேர்வில் பெறும் மதிப்பெண்கள் மற்றும் விண்ணப்பதாரரின் தொழில்நுட்ப தகுதி அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

www.powergrid.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 18.4.2023.

The post பவர்கிரிட் நிறுவனத்தில் 138 இடங்கள் : பி.இ., படித்தவர்களுக்கு வாய்ப்பு appeared first on Dinakaran.

Tags : Power Grid Company ,PowerGrid ,Union ,POWERGRIT Company ,Dinakaran ,
× RELATED அதிகரித்து வரும் வெப்பநிலை தீ தடுப்பு,...