×

இழப்பீட்டு தொகையில் பாக்கி: பெரியகுளத்தில் அரசு பஸ் ஜப்தி

பெரியகுளம், ஏப். 13: தேனி அருகே உள்ள உப்புக்கோட்டையைச் சேர்ந்தவர் முத்தையா (23). இவர், கடந்த 2000ம் ஆண்டு தோட்ட வேலைக்கு சென்று விட்டு டூவீலரில் வீடு திரும்பினார். அப்போது தேனி பி.சி.பட்டி பகுதியில் அரசு பஸ் டூவீலரில் மோதியது. இதில் முத்தையா சம்பவ இடத்திலேயே பலியானார். இதனைத் தொடர்ந்து அவரது தந்தை ராசு அரசு பஸ் மோதிய விபத்தில் மகனுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என பெரியகுளத்தில் உள்ள கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இந்நிலையில், வழக்கு விசாரணை முடிவுற்று 2005ம் ஆண்டு நீதிமன்றம் இழப்பீட்டுத் தொகையாக ரூ.5,23,304 வழங்க உத்தரவிட்டது.

நீதிமன்றம் உத்தரவிட்ட தொகையில் முழுமையாக வழங்காமல் ரூ.3,85,813 ரூபாய் மட்டுமே அரசு போக்குவரத்து கழகம் வழங்கியுள்ளது. இழப்பீட்டுத் தொகையை முழுமையாக வழங்காத காரணத்தால் பாதிக்கப்பட்ட நபர் மீண்டும் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அதன் அடிப்படையில் நீதிமன்றம் மீண்டும் இழப்பீட்டுத் தொகையாக ரூ.2,19,303யை வழங்க உத்தரவிட்டது. நீதிமன்றம் உத்தரவிட்டும் இழப்பீட்டுத் தொகை வழங்காததால் பெரியகுளம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி கணேசன் உத்தரவின்ேபரில், நேற்று பெரியகுளம் பேருந்து நிலையத்திலிருந்து அரசு பஸ்சை நீதிமன்ற அமீனா ரமேஷ் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.

The post இழப்பீட்டு தொகையில் பாக்கி: பெரியகுளத்தில் அரசு பஸ் ஜப்தி appeared first on Dinakaran.

Tags : Periyakulam ,Muttiah ,Uplukkottai ,Theni ,
× RELATED நீர்ப்பிடிப்பு பகுதியில் மழையால்...