×

கோவில்பட்டியில்வியாபாரிகள் வாயில் கருப்பு துணி கட்டி போராட்டம்

கோவில்பட்டி, ஏப். 13: கோவில்பட்டியில் மார்க்கெட் வியாபாரிகள் வாயில் கருப்பு துணி கட்டி மவுன போராட்டம் நடத்தினர். கோவில்பட்டியில் நகராட்சிக்கு சொந்தமான பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தினசரி காய்கறி சந்தையில் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புதிய கடைகள் கட்டுவதற்கு திட்டம் தயாரிக்கப்பட்டு 250 கடைகள் கட்டுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே 396 கடைகள் செயல்பட்டு வரும் நிலையில் 250 கடைகள் மட்டும் கட்டப்படுவதால் மீதமுள்ள 146 வியாபாரிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே இந்த இடத்தில் கடைகளை கட்டுவதற்கு பதிலாக புதிதாக வேறு இடத்தில் கடைகளை கட்ட வேண்டுமென வலியுறுத்தி கோவில்பட்டி மார்க்கெட் வியாபாரிகள் நேற்று கடைகளில் கருப்பு கொடி கட்டினர். மேலும் வாயில் கருப்பு துணி கட்டி மார்க்கெட் நுழைவு வாயில் முன்பு மவுன போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட செயலாளர் பாஸ்கரன், மாநில வியாபாரிகள் சங்க தலைவர் ஈஸ்வரன் மற்றும் வியாபாரிகள் திரளாக கலந்து கொண்டனர்.

The post கோவில்பட்டியில்
வியாபாரிகள் வாயில் கருப்பு துணி கட்டி போராட்டம்
appeared first on Dinakaran.

Tags : Kovilpatti ,Govilpatti ,Dinakaran ,
× RELATED கோவில்பட்டியில் பயங்கரம் 2 பேர்...