×

ஆதிக் அகமது வீட்டில் அமலாக்க துறை ரெய்டு

லக்னோ: கடந்த பிப்ரவரி மாதம் உபி மாநிலம் பிரயாக்ராஜில் உமேஷ் பால் மற்றும் அவரது 2 பாதுகாவலர்கள் சுட்டு கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் எம்பி ஆதிக் அகமது, அவரது சகோதரர் அஷ்ரப் உள்ளிட்ட பலர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். இந்த வழக்கு விசாரணைக்காக குஜராத்தின், சபர்மதி சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆதிக் அகமதுவை உபிக்கு கொண்டு வர உள்ளனர்.

இந்நிலையில், பிரயாக்ராஜில் உள்ள ஆதிக்கின் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை நேற்று சோதனை நடத்தியது. கடந்த 2005ம் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சி எம்எல்ஏ ராஜு பால் கொலை வழக்கில் முக்கிய சாட்சியாக இருந்தவர் உமேஷ் பால் என்பது குறிப்பிடத்தக்கது.

The post ஆதிக் அகமது வீட்டில் அமலாக்க துறை ரெய்டு appeared first on Dinakaran.

Tags : Enforcement Directorate ,Aadiq Ahmed ,Lucknow ,Umesh Paul ,Prayagraj, UP ,Enforcement Department ,Adiq Ahmed ,Dinakaran ,
× RELATED செந்தில் பாலாஜி வழக்கில் சுப்ரீம்...