×

பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில் 4 ராணுவ வீரர்களை சுட்டுக்கொன்றது தீவிரவாதிகளா?

சண்டிகர்: பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில் 4 ராணுவ வீரர்களை சுட்டுக்கொன்றது தீவிரவாதிகளா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. பதிண்டா தாக்குதல் தொடர்பாக போலீஸ் பதிவு செய்துள்ள வழக்கில் முகமூடி அணிந்த நபர்கள் துப்பாக்கியால் சுட்டதாக தகவல் வெளியானது. பைஜாமா குர்தா அணிந்து முகமூடி போட்டு வந்த இருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக போலீஸ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது. பணி முடிந்து வந்து பதிண்டா முகாமில் உறங்கிய போது 4 வீரர்களை மர்மநபர்கள் சுட்டுக் கொன்றதாக எஃப்.ஐ.ஆரில் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீவிரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த 4 பேரின் பெயர்களை ராணுவம் தெரிவித்துள்ளது. யோகேஷ்குமார், கமலேஷ், சாகர், சந்தோஷ் ஆகிய வீரர்கள் வீரமரணம் அடைந்ததாக ராணுவம் தெரிவித்துள்ளது.

The post பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில் 4 ராணுவ வீரர்களை சுட்டுக்கொன்றது தீவிரவாதிகளா? appeared first on Dinakaran.

Tags : Punjab State ,Bhindinda ,Chandigarh ,Punjab State Bhodinda ,Battinda Attack ,Punjab ,
× RELATED பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சரண்ஜித் சன்னி வெற்றி