×

டூவீலர் மீது லாரி மோதி தொழிலாளி சாவு

மோகனூர், ஏப்.12: நாமக்கல் வகுரம்பட்டி அடுத்த குடித்தெருவை சேர்ந்த கூலித்தொழிலாளி மணிகண்டன்(41). இவர் நேற்று மதியம் வளையப்பட்டியில் இருந்து நாமக்கல்லுக்கு டூவீலரில் சென்றுள்ளார். வளையப்பட்டி பாலத்தில் சென்றபோது, நாமக்கல்லில் இருந்து திருச்சி நோக்கி சென்ற லாரி, டூவீலர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட மணிகண்டன், தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மோகனூர் போலீசார், மணிகண்டனின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post டூவீலர் மீது லாரி மோதி தொழிலாளி சாவு appeared first on Dinakaran.

Tags : Mohanur ,Manikandan ,Namakkal Vakurambatti ,Krangapatti ,Namakall ,Dinakaran ,
× RELATED மோகனூர் அருகே மணல் கடத்தல் வழக்கில் லாரி உரிமையாளர் கைது