- மஞ்சப்பாய்
- திண்டிகுல் பேருந்து
- திண்டுக்கல்
- திண்டிகுல் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்
- GTN கல்லூரி
- திண்டிகுல் பேருந்து நிலையம்
- தின மலர்
திண்டுக்கல், ஏப். 12: திண்டுக்கல் மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் ஜிடிஎன் கல்லூரி இணைந்து பஸ் ஸ்டாண்டில் மீண்டும் மஞ்சப்பை திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மாசு கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் பொறியாளர் மணிமாறன் தலைமை வகிக்க, உதவி பொறியாளர் அனிதா, திவ்யா, மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் தங்கவேல் முன்னிலை வகித்தனர். திண்டுக்கல் மாவட்டத்தை நெகிழி இல்லா மாவட்டமாக மாற வேண்டும் என்பதை வலியுறுத்தி ஜிடிஎன் கல்லூரி மாணவர்கள் ஒன்றிணைந்து மஞ்சப்பையை கையில் ஏந்தியும், பொதுமக்களுக்கு வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் ஜிடிஎன் கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
The post திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில்
மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு appeared first on Dinakaran.
