×

அணையில் மூழ்கி ஆட்டோ டிரைவர் பலி

விருதுநகர், ஜன.12: குல்லூர் சந்தை அணையில் மீன் பிடிக்கச் சென்ற ஆட்டோ டிரைவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். விருதுநகர் அல்லம்பட்டியை சேர்ந்தவர் வீரபத்திரன் மகன் பால்பாண்டி (32). இவர் நேற்று முன்தினம் நண்பர்களுடன் குல்லூர் சந்தை அணையில் மீன்பிடிக்க சென்றுள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக மண் சகதியில் பால்பாண்டி சிக்கினார். தகவலின்பேரில் விருதுநகர் தீயணைப்பு துறையினர், உயிரிழந்த பால்பாண்டியின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து விருதுநகர் சூலக்கரை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags : Virudhunagar ,Kullur Market Dam ,Veerabhadran ,Palpandi ,Allampatti, Virudhunagar ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை