திருப்புவனம், ஜன.12: பூவந்தி அருகே இருவேறு சாலை விபத்துக்களில் 2 பேர் பலியாயினர். சிவகங்கை அருகே சித்தலூரை சேர்ந்த தமிழ்ச் செல்வன்(67). நல்லாகுளம் பாலம் அருகே நடந்து செல்லும்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார்.
மற்றொரு விபத்தில் இலுப்பக்குடியை ேசர்ந்த செந்தில் திருப்பதி(43). இவர் தனது டூவீலரில் கிளாதிரிக்கு சென்ற போது, சாலை ஓரத்திலிருந்த மோட்டார் ரூம் கட்டிடத்தில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இரண்டு விபத்துகள் குறித்தும் பூவந்தி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
