×

இவானா பிட்னெஸ் சீக்ரெட்ஸ்

நன்றி குங்குமம் டாக்டர்

2012-ஆம் ஆண்டு ‘மாஸ்டர்ஸ்’ என்னும் மலையாள திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை இவானா. அலீனா ஷாஜி எனும் அவரது இயற்பெயரை திரைத்துறைக்காக, இவானா என்று மாற்றி வைத்துக் கொண்டார். இவானா கேரள மாநிலத்தை சேர்த்தவர். பள்ளிப் படிப்பு, கல்லூரி படிப்பெல்லாம் கேரளாவில்தான். பி.காம் படித்திருக்கிறார். கல்லூரியில் படிக்கும் போது மாடலாக வாய்ப்பு வர, மாடலிங் துறையிலும் கால்பதித்தார். பின்னர், 2018-ஆம் ஆண்டு பாலா இயக்கத்தில் ஜோதிகா நடிப்பில் வெளியான ‘நாச்சியார்’ திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

அதைத்தொடர்ந்து, 2019-இல் ஹீரோ என்ற படத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு, கோமாளி பட இயக்குநர், பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடித்து சமீபத்தில் வெளியான லவ் டு டே படத்தில் , பிரதீப்க்கு ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்களின் உள்ளத்தை கொள்ளை கொண்டுவிட்டார் இவானா. தமிழ் மற்றும் மலையாளப்படங்களில் கலந்து நடித்து வரும் இவானா, தற்போது தமிழில் கள்வன் , லெட்ஸ் கெட் மேரேஜ் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இவானா தனது பிட்னெஸ் குறித்து நம்முடன் பகிர்ந்து கொண்டவை:

வொர்க்கவுட்ஸ்

நான் ஒரு மாடலாகவும், நடிகையாகவும் இருப்பதால், உடலை பிட்டாக வைத்துக் கொள்வது எவ்வளவு முக்கியம் என்பதை நன்கு உணர்ந்திருக்கிறேன். ஏனென்றால், முன்பெல்லாம், எனது உயரம் குறைவாக இருக்கிறது. உடல் ஃபிட்டாக இல்லை என்ற காரணத்துகாகவே, பல திரைப்படங்களின் வாய்ப்புகளை இழந்திருக்கிறேன். அப்போதெல்லாம், உடல் தோற்றத்தை வைத்து ரிஜக்ட் செய்வதை நினைத்து மிகவும் வருத்தப்படுவேன். பின்னர், அதையே ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு பிட்னெஸில் சீரியஸாக கவனம் செலுத்த தொடங்கினேன்.

அதன்பிறகுதான், ஜிம் போய் உடற்பயிற்சிகள் செய்வதில் எல்லாம் இறங்கினேன். தினசரி 1 மணி நேரமாவது உடற்பயிற்சிகளுக்காக ஒதுக்கிவிடுவேன். அதுபோன்று, காலை எழுந்ததும் அரை மணி நேரம் நடைபயிற்சி. ஒரு சில யோகா பயிற்சிகள். இதுதவிர, நேரம் கிடைக்கும்போதெல்லாம் நடன பயிற்சிகளும் மேற்கொள்ளுவேன். இப்போது நான் பிட்டாக இருப்பதாக நினைக்கிறேன். அதனால், நிராகரிப்பு பற்றியெல்லாம் கவலை படுவதில்லை. என் நடிப்பு மீது நம்பிக்கை வைத்து எனக்கான கதைகள் தேடி வந்தால் போதும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்.

டயட்

நான் அவ்வளவு ஃபுட்டி கிடையாது. அதுபோன்று, உணவு கட்டுப்பாடுகளும் பெரிதாக ஃபாலோ பண்ண மாட்டேன். எல்லா உணவுகளுமே சாப்பிடுவேன். குறிப்பாக, சிக்கன் கறி, ப்ரை பிஷ், சப்பாடு, தோரன், டார்க் சாக்லெட்ஸ் இதெல்லாம் என்னுடைய பேவரைட்ஸ். அதுபோன்று சூட்டிங் போகிற இடத்தில் எனக்கு சாப்பாடு செட் ஆகவில்லை என்றால், சாக்லெட்கள் சாப்பிட்டு சமாளித்துக் கொள்வேன். ஏனென்றால் உணவில் இருக்கும் கலோரியை சாக்லெட் சமன் செய்துவிடும். மற்றபடி வீட்டில் இருக்கும்போது அம்மா என்ன சமைக்கிறாங்களோ அவை எல்லாமே பிடிக்கும்.

பியூட்டி

பியூட்டிக்காக பெரிய மெனக்கெடல்கள் எல்லாம் என்னிடம் கிடையாது. பெரிதாக மேக்கப் போட்டுக் கொள்ளும் பழக்கமும் எனக்கில்லை. சூட்டிங் நேரத்தில் போடும் மேக்கப்போடு சரி. ஆனால், வீட்டிலேயே சின்ன சின்ன இயற்கை டிப்ஸ் ஃபாலோ பண்ணுவேன். உதாரணமாக ஹேர் கேருக்காக வாரத்தில் இரண்டுநாள் ஹேர் பேக் போடுவேன். அதில் ஆலுவேரா, ஆனியன் ஜூஸ், பிருங்காதி தைலம், முட்டை வெள்ளை கரு இவை எல்லாம் கலந்து நானே ஒரு ஹேர் பேக் தயார் செய்து அதைதான் பயன்படுத்துவேன். அதுபோன்று தலைக்கு தேங்காய் எண்ணெய்தான் பயன்படுத்துவேன்.

வெளியே எங்காவது செல்வது என்றால் ஸ்கின் கேருக்காக சன் ஸ்க்ரீன் போட்டுக்கொள்வேன் அவ்வளவுதான். அதுபோன்று, இரவில் தூங்குவதற்கு முன்பு 2 நிமிடம் பேஸ் மசாஜ் க்ரீம் போட்டு மசாஜ் செய்துவிட்டு தூங்குவேன். அவ்வளவுதான் எனது பியூட்டி ரகசியம். மற்றபடி, எனது ஹேண்ட் பேக்கில் பார்த்தீங்கன்னா, சீப்பு, வைப்பர், பெர்ப்யூம், ஹை லைனர், பேபி ஆயில் இவைகள்தான் இருக்கும். பேபி ஆயில் எதற்காக என்றால் அதைவைத்துதான் மேக்கப்பை ரிமூவ் செய்வேன் அவ்வளவுதான்.

தொகுப்பு : ஸ்ரீதேவி குமரேசன்

The post இவானா பிட்னெஸ் சீக்ரெட்ஸ் appeared first on Dinakaran.

Tags : Ivana ,Fitness Secrets ,Ivana Fitness Secrets ,
× RELATED மேக்கப் இல்லாமல் நடித்த இவானா