×

நண்பனிடம் கொள்ளை, கொள்ளையனாக மாறிய நெருங்கிய தோழன்: இருவர் கைது

ஈரோடு: கோபியில் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் இரண்டு கோடியே எண்பது லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட பணம் கொள்ளையடிக்க பயன்படுத்தும் உபகரணங்கள் ஆகியவற்றை மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சசி மோகன் கோபி காவல் நிலையத்தில் பார்வையிட்டார்.

ஈரோடு மாவட்டம் கோபி வடக்கு பார்க் வீதியைச் சேர்ந்தவர் முரளி இவர் ஆயுர்வேத டாக்டராக உள்ளர். இவரது மகன் சுதர்சன் எம்.எஸ். படித்துள்ள சுதர்ஷன் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகின்றர்.கோபியில் வீடு வாங்குவதற்கு முடிவு செய்துள்ளார். ரூ. 3.25 கோடி வீட்டை விலை பேசி முடித்தவர், முதல்கட்டமாக ரூ. 15 லட்சம் வங்கி மூலமாக முன்பணமாக கொடுத்துள்ளர்.

அதை தொடர்ந்து வீட்டின் குடிநீர் இணைப்பு, மின் இணைப்பு உள்ளிட்ட ஆவணங்களை சுதர்சன் பெயர்க்கு மாற்றம் செய்த பிறகு மீதமுள்ள ரூ. 3.10 கோடி தருவதாக குறிவுள்ளார்.என்னினும் வீட்டின் சாவியை உரிமையாளர் சுதர்சனிடம் ஒப்படைத்திருந்தார். நண்பரிடம் வீடு வாங்குவதற்காக ரூ. 3 கோடியை 3 நாட்களுக்கு முன்னர் கடன் வாங்கியுள்ளர்.

அந்த ரூ. 2.80 கோடியை சுதர்ஷன் புதிய வீட்டில் வைத்துள்ளார். வீட்டின் படுக்கை அறையில் 4 பேட்டிகளில் சுதர்ஷன் பத்திரம் படுத்திவைத்ததோடு, அங்கு தற்காலிகமாக சி.சி.டி.வி கேமராகளையும் பொருத்தி கண்காணித்து வந்துள்ளர். அந்த பணம் நேற்று முன்தினம் கொள்ளை போனது இது தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்ட நிலையில் வீட்டின் அமைப்பை முன்கூட்டியே தெரியாத நபர்களால் கொள்ளை அடித்திருக்க முடியாது என்பதை கண்டுபிடித்த போலீசார், சுதர்சனுக்கு நெருக்கமானவர்களிடம் விசாரணை நடத்தியதில் திருட்டில் இடப்பட்டது அவரது நண்பரான ஸ்ரீதரன் என்பதை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து அவரை பிடித்த போலீசார், கொள்ளைப்போன முழுப்பணத்தையும் பறிமுதல் செய்தனர். அந்த பணத்தை இன்று கோபி காவல் நிலையத்தில் காட்சிப்படுத்தினர். அதை மாவட்ட கண்காணிப்பாளர் சசிமோகன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கொள்ளை போன 24 மணி நேரத்திற்குள் கொள்ளையர்களை கைது செய்ததுடன் மோதப்பணமும் மீட்கப்பட்டதாக கூறியுள்ளார்.

பொதுவாக கொள்ளை வழக்குகளில் கொள்ளை அடிக்கப்பட்டது குற்றவாளிகள் குறைந்தபட்ச தொகையை செலவு செய்து விடுவார்கள், ஆனால் இந்த வழக்கில் உடனடியாக குற்றவாளிகள் கண்டறியப்பட்டதால் கொள்ளையடிக்கப்பட்ட முழு தொகையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.கொள்ளை அடிக்கப்பட்ட வீட்டில் இருந்த சி.சி.டிவி கேமரா பழுதடைந்த நிலையில் அருகில் உள்ள கேமராக்கள் மூலம் கொள்ளையர்களை கண்டுப்பிடித்ததாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

The post நண்பனிடம் கொள்ளை, கொள்ளையனாக மாறிய நெருங்கிய தோழன்: இருவர் கைது appeared first on Dinakaran.

Tags : Erode ,Gobi ,Dinakaran ,
× RELATED கோபி அருகே கோயில் திருவிழாவில்...