×

கார் டயர் வெடித்து 11 பேர் படுகாயம்

திருப்புவனம்,ஏப்.11: பசியாபுரத்தை சேர்ந்த ராஜு, சோணைமுத்து குடும்பத்தினர் 10 பேர் இளையான்குடி அருகே ஆலம்பச்சேரி உறவினர் வீட்டு காதணி விழாவில் கலந்து கொண்டனர். பின்னர் பசியாபுரம் திரும்புகையில் அவர்கள் சென்ற காரின் பின்பக்க டயர் வெடித்து நிலை தடுமாறி ரோட்டில் நடந்து சென்ற ஒருவர் மீது மோதி கவிழ்ந்தது. இதில் காரை ஓட்டிய மதுரை பொன்மேனியை சேர்ந்த டிரைவர் பூவேல் உட்பட இதில் பயணித்த 3 குழந்தைகள் உட்பட 10 பேர் காயமடைந்தனர். இருவர் பலத்த காயமடைந்துள்ளனர். திருப்பாச்சேத்தி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

The post கார் டயர் வெடித்து 11 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Tiruppuvanam ,Raju ,Sonaimuthu ,Pasiyapuram ,Kadhani ceremony ,Alambacherry ,Ilayayankudi ,
× RELATED திருப்புவனம் அருகே சோகம் 6 மாத...