×

வாலிபரை தாக்கிய இருவர் கைது

சங்கராபுரம், ஏப். 10: சங்கராபுரம் அருகே மணலூர் பகுதியைச் சேர்ந்தவர் அரசு (33). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த அருள் என்பவருக்கும் இடம் சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது. சம்பவத்தன்று அருள், அவரது மகன் ஸ்டாலின் மற்றும் ராமசாமி மகன் விவேக் (26) ஆகியோர் அரசை தாக்கி மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் வடபொன்பரப்பி இன்ஸ்பெக்டர் இளங்கோவன் வழக்கு பதிவு செய்து அருள் (50), ஸ்டாலின் (21) ஆகிய இருவரையும் கைது செய்து விவேக்கை தேடி வருகின்றனர்.

The post வாலிபரை தாக்கிய இருவர் கைது appeared first on Dinakaran.

Tags : Sankarapuram ,Manalur ,Dinakaran ,
× RELATED ஏழுலோகநாயகி