×

அமைச்சர் கே.என்.நேரு தகவல் முசிறி நகராட்சி பகுதியில் கழிவுநீர் அகற்றும் வாகனம் உரிமம் பெற அழைப்பு

முசிறி: முசிறி நகராட்சி ஆணையர் கிருஷ்ணவேணி தெரிவித்துள்ளதாவது: முசிறி நகராட்சி பகுதியில் கழிவுநீர் அகற்றும் வாகன உரிமையாளர்கள் கழிவுநீர் அகற்றும் வாகன உரிமம் பெற தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். நகராட்சி மூலம் இரண்டு ஆண்டுகள் செல்லத்தக்க உரிமம் பெற, விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் வழங்கப்படும். இதற்கான நகராட்சி கட்டணம் ரூ.2000 ஆகும். மேலும் உரிய பாதுகாப்பு உபகரணங்களுடன் பாதுகாப்பாக இயங்க வேண்டும். செப்டிக் டேங்க் அகற்றும் வாகன உரிமையாளர்கள் உடனடியாக உரிமம் பெற்று இயங்க வேண்டும். அவ்வாறு உரிமம் இல்லாமல் இயங்கும் வாகனங்களை கண்டறியப்பட்டால் அந்த வாகனம் எவ்வித முன்னறிவிப்பு இன்றி நகராட்சியால் பறிமுதல் செய்யப்படும் என நகராட்சி ஆணையர் கிருஷ்ணவேணி தெரிவித்துள்ளார்.

The post அமைச்சர் கே.என்.நேரு தகவல் முசிறி நகராட்சி பகுதியில் கழிவுநீர் அகற்றும் வாகனம் உரிமம் பெற அழைப்பு appeared first on Dinakaran.

Tags : Minister ,K.N. Nehru ,Musiri ,Municipal ,Municipal Commissioner ,Krishnaveni ,Musiri Municipality ,
× RELATED இளங்கலை படிப்பில் சேர முசிறி அரசு கல்லூரியில் சிறப்பு கலந்தாய்வு