×

கொக்கி போட்டு மின்சாரம் எடுக்கும் பொதுமக்கள்

தேன்கனிக்கோட்டை: தேன்கனிக்கோட்டையில், மின் விநியோகம் இல்லாததால், பொதுமக்கள் கொக்கி போட்டு மின்சாரம் எடுத்து வருகின்றனர். தேன்கனிக்கோட்டை அடுத்த அஞ்செட்டி தாலுகா கோட்டையூர் ஊராட்சியில் நாயக்கன்கோட்டை கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் உள்ள 45 வீடுகளுக்கு மின்சார இணைப்பு இல்லை. இது தொடர்பாக பலமுறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் கம்பங்கள் அமைத்து மின்இணைப்பு வழங்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த கிராமத்தின் வழியாக உயர்மின் அழுத்த மின்சார ஒயர்கள் சென்ற போது 45 வீடுகளுக்கு மட்டும் மின் இணைப்பு வழங்காமல் உள்ளது. மின்சாரம் இல்லாமல் சிரமப்பட்டு வந்த மக்கள் வேறு வழி தெரியாமல் தங்களது வீட்டின் முன் செல்லும் மின்சார ஒயர்களில் கொக்கி போட்டு வீட்டிற்கு மின்சாரம் எடுத்து வருகின்றனர். இதனால் காற்று மற்றும் மழை காலங்களில் அவர்களது வீட்டில் இருக்கும் மின்சாதன பொருட்கள் சேதமாகி விடுகிறது. எனவே, இப்பகுதியில் மின்கம்பங்கள் அமைத்து மின்சார வினியோகம் செய்ய வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post கொக்கி போட்டு மின்சாரம் எடுக்கும் பொதுமக்கள் appeared first on Dinakaran.

Tags : Dhenkanikottai ,Dhenkanikot ,
× RELATED தாழ்வாக தொங்கிய மின்கம்பியில் உரசி யானை உயிரிழப்பு