×

ஒட்டன்சத்திரம் நகரில் ரூ.10 கோடி மதிப்பில் திட்ட பணிகள்: அமைச்சர் அர.சக்கரபாணி துவக்கி வைத்தார்

ஒட்டன்சத்திரம், ஏப். 10: ஒட்டன்சத்திரம் நகராட்சிக்குட்பட்ட கே.கே. நகர், குறிஞ்சி நகர், பழனிக்கவுண்டன் புதூர் உள்ளிட்ட பகுதிகளில் புதிய நியாய விலை கட்டிடங்களை திறந்து வைத்தும், சங்குபிள்ளை புதூர், கே.கே.நகர், தோட்டத்து சாலை, மேட்டுப்பட்டி,க ஸ்தூரி நகர், வர்த்தக நகர், ஏ.பி.பி. நகர், சீத்தப்பட்டி, பொன்னகரம், குறிஞ்சி நகர் உள்ளிட்ட பகுதிகளில் ரூ.10 கோடி மதிப்பில் தார்சாலை மற்றும் மழைநீர் வடிக்கால் அமைக்கும் பணிகளுக்கு நேற்று உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி அடிக்கல் நாட்டி துவங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சிகளில் திண்டுக்கல் எம்பி வேலுச்சாமி, மாவட்ட துணை செயலாளர் ராஜாமணி, நகர செயலாளர் வெள்ளைச்சாமி, மாவட்ட அவை தலைவர் மோகன், நகர் மன்ற தலைவர் திருமலைச்சாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கண்ணன், பொதுக்குழு உறுப்பினர் பாலு, ஒன்றிய துணை செயலாளர் முருகானந்தம், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பாண்டியராஜன், நகர அவை தலைவர் சோமசுந்தரம், மாவட்ட பிரதிநிதிகள் சிவக்குமார், சுலைமான், கோட்டாட்சியர் சிவகுமார், வட்டாட்சியர் முத்துச்சாமி ஆணையாளர் சக்திவேல், இளநிலை உதவியாளர் ஈஸ்வரன் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள், வார்டு செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

The post ஒட்டன்சத்திரம் நகரில் ரூ.10 கோடி மதிப்பில் திட்ட பணிகள்: அமைச்சர் அர.சக்கரபாணி துவக்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Othanchatram ,Minister ,A. Chakrapani ,Otanchatram ,Municipality ,Nagar ,Kurinji Nagar ,Palanikkundan Pudur ,Othanchatram Nagar ,Dinakaran ,
× RELATED ஒட்டன்சத்திரம் சந்தையில் காய்கறி விலை வீழ்ச்சி