×

அருணாச்சலா மேல்நிலை பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா

கடலூர், ஏப். 9: குறிஞ்சிப்பாடி அருணாச்சலா பள்ளியில் தாளாளர் பன்னீர்செல்வம் தலைமையில் மழலையர் பட்டமளிப்பு விழா நடந்தது. செயலர் சட்டநாதன் முன்னிலை வகித்தார். கல்வி ஆலோசகர்கள் ரவிச்சந்திரன், கார்த்திகேயன், இயக்குநர்கள் அரசு, வேலு, ராஜேந்திரன், டாக்டர் பிரியதர்ஷினி ஆகியோர் யு.கே.ஜி மழலையர்களுக்கு பட்டங்கள் வழங்கி வாழ்த்திப் பேசினர். பள்ளி முதல்வர் இப்ராஹிம் ஷெரிப் வரவேற்புரை ஆற்றினார். மழலையர்கள் பிரிவு தலைமை ஆசிரியை பானு மற்றும் வகுப்பு ஆசிரியைகள் ஆகியோருக்கு மரியா மாண்டிசோரி அம்மையார் நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டன.

ஆசிரியர்கள் அபிராமி, சித்ரா, சாந்தி, அலோசியஸ், வினோத்குமார், சண்முகவேல், ராஜேஷ், புனிதா, விஜயசாமுண்டீஸ்வரி, சுபா, லியோ வெஸ்லீ ஸ்டீபன், பசுபதி, சதீஷ், சிவராஜன், சங்கரலிங்கம், மதி, பரமதயாளன், வின்ஸி ஜெனிவா, சிவக்குமார், சந்தோஷ் மற்றும் நர்சரி மற்றும் பிரைமரி பிரிவு ஆசிரியைகள், இடைநிலை பிரிவு ஆசிரிய, ஆசிரியைகள், நிர்வாக அலுவலர் பிரபு, அலுவலக ஊழியர்கள் பாஸ்கர், செவ்வந்தி, கயல்பிரபா ஆகியோர் கலந்துகொண்டனர். பின்னர் மழலையர்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. முதுகலை ஆசிரியர் டாக்டர் மதிவாணன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். ஆசிரியர் ஜோதிலிங்கம் நன்றி கூறினார்.

The post அருணாச்சலா மேல்நிலை பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா appeared first on Dinakaran.

Tags : Arunachal High School ,Cuddalore ,Kurinchipadi Arunachala School ,Principal ,Panneerselvam ,Chattanathan ,Kindergarten Graduation Ceremony ,Arunachal ,High School ,Dinakaran ,
× RELATED மாநகராட்சி ஆணையரை கண்டித்து ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு