
விசாகபட்டினம்: ஆந்திராவில் 16 ஆண்டுகளுக்கு முன் 11 பழங்குடியின பெண்கள் கும்பல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் குற்றச்சாட்டுக்கு ஆளான 21 போலீசாரை கோர்ட்டு விடுதலை செய்து உள்ளது. ஆந்திர பிரதேசத்தில் அல்லூரி சீதாராம ராஜூ மாவட்டத்தில் வக்கபள்ளி கிராமத்தில் கொந்த் என்ற பழங்குடியினர் வசித்து வருகின்றனர். 2007ம் ஆண்டு ஆகஸ்டில் சிறப்பு போலீஸ் படையினர் இந்த பகுதியில் விசாரணை என்ற பெயரில் தேடுதல் வேட்டைக்கு சென்றனர். 21 பேர் கொண்ட இந்த படையினர் கிராமத்தில் பழங்குடியின பெண்கள் 11 பேரை வேட்டையாடி, கும்பல் பலாத்காரம் செய்து உள்ளனர் என குற்றச்சாட்டு எழுந்தது. இதுபற்றிய விசாரணை விசாகப்பட்டினத்தில் நடந்து வந்தது. கூடுதல் மாவட்ட மற்றும் செசன்ஸ் நீதிபதி மற்றும் எஸ்.சி. மற்றும் எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்திற்கான சிறப்பு கோர்ட்டு, இந்த விசாரணையில் முறையான மற்றும் பாரபட்சமற்ற விசாரணையை போலீசார் மேற்கொள்ளவில்லை என கூறி 21 போலீசாரை விடுவித்து உத்தரவிட்டு உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
The post 11 பழங்குடி பெண்கள் பலாத்காரம் 21 போலீசாரை விடுவித்தது நீதிமன்றம் appeared first on Dinakaran.
