×

சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்டவை ஜெயலலிதாவின் பொருட்களை ஏலம் விட அரசு வக்கீல் நியமனம்

பெங்களூரு: சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சசிகலா சுதாகரன் இளவரசி ஆகியோரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் சொத்துக்களை கர்நாடக அரசு ஏலம் விட நீதித்துறை சார்பில் அரசு வழக்கறிஞரை நியமித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. கர்நாடக அரசு தரப்பு வழக்கறிஞர் கிரண் எஸ்.ஜாவளி ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை ஏலம் விடுவதற்கான அரசு வக்கீலாக நியமனம் செய்துள்ளனர்.
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களில் குறிப்பாக அழிந்து வரும் சேலை, செருப்பு போன்ற பொருட்களை உடனடியாக ஏலம் விட்டு அரசுக்கு வருவாய் ஈட்ட வேண்டும் என பெங்களூருவை சேர்ந்த ஆர்டிஐ ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி பெங்களூரு முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்த நிலையில் அந்த வழக்கின் மீது தீர்ப்பளித்த நீதிமன்றம் உடனடியாக சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து பொருட்களையும் ஏலம் விட அரசு தரப்பு வழக்கறிஞரை நியமனம் செய்ய வேண்டும் என தீர்ப்பு வழங்கியிருந்த நிலையில் அந்த தீர்ப்பின் அடிப்படையில் தற்பொழுது கர்நாடக அரசு தரப்பு வழக்கறிஞரை நியமனம் செய்துள்ளது.

The post சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்டவை ஜெயலலிதாவின் பொருட்களை ஏலம் விட அரசு வக்கீல் நியமனம் appeared first on Dinakaran.

Tags : Jayalalithaa ,Bengaluru ,Sasikala Sudhakaran Illacashsi ,Dinakaran ,
× RELATED தேசிய நெடுஞ்சாலையில் கழன்று ஓடிய கன்டெய்னர் லாரியின் முன்பக்க டயர்கள்