×

மாவட்டத்தில் பள்ளி செல்லா, இடைநின்ற மாற்றுத்திறன் குழந்தைகள் கணக்கெடுப்புப் பணி மும்முரம்

திருவள்ளூர்: திருவள்ளூர் ஒருங்கிணைந்த கல்வி மாவட்டம் சார்பில், ஒவ்வொரு வீடு, வீடாக சென்று பள்ளி செல்லா குழந்தைகள், இடைநின்ற குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளைக் கண்டறிந்து வயதுக்கேற்ப வகுப்புகளில் சேர்ப்பதற்கான கணக்கெடுப்புப் பணிஏப்ரல் மாதத்தில் முதல் இரண்டு வாரங்கள் மற்றும் மே மாதத்தில் கடைசி இரண்டு வாரங்கள் ஆகிய நாட்களில் நடைபெற இருப்பதாக மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் ஒருங்கிணைந்த கல்வி மாவட்டம் மூலம் ஆண்டுதோறும் பள்ளி செல்லா, இடைநின்றற குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகள் கணக்கெடுக்கும் பணி ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறுவது வழக்கம்.

அதேபோல் இந்த ஆண்டு 6 முதல் 18 வயதுடைய பள்ளிச் செல்லா குழந்தைகள், இடைநின்ற குழந்தைகள் மற்றும் 1 முதல் 18 வயதுடைய மாற்றுத்திறறன் கொண்ட குழந்தைகளின் கணக்கெடுப்பு ஏப்ரல் மாதத்தில் முதல் இரண்டு வாரங்கள் மற்றும் மே மாதத்தில் கடைசி இரண்டு வாரங்கள் ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது. இந்த மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு வட்டார அளவிலும் மேற்பார்வையாளர்கள் தலைமையில் அதிகாரிகள் வீடு, வீடாகச் சென்று கணக்கெடுப்பு பணி நடத்தவும் உள்ளனர். இதில் குறிப்பாக தொழிற்சாலை, ரயில் நிலையம், பேருந்து நிலையம், கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடங்கள், மார்க்கெட் மற்றும் சந்தை பகுதிகளில் கணக்கெடுப்பு நடத்தும்போது குழந்தை தொழிலாளர் நலத் துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் காவல் துறையினருடன் இணைந்து நடத்தப்பட உள்ளது.

இக்கணக்கெடுப்புப் பணி திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு வட்டார மேற்பார்வையாளர், ஆசிரியர் பயிற்றுநர்கள், பள்ளித் தலைமையாசிரியர்கள், பள்ளி ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், கல்வியாளர்களான தன்னார்வலர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் தொடர்புடைய பிற துறை அலுவலர்களின் உதவியுடன் தொடங்கி நடைபெற உள்ளது. இந்த கணக்கெடுப்பின் போது கண்டறியப்படும் பள்ளி செல்லா, இடைநின்ற மற்றும் மாற்றுத் திறறனாளி குழந்தைகள் ஆகியோர் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009-இன் படி முதலில் அந்தந்தப் பகுதிகளில் அருகே உள்ள பள்ளிகளில் வயதுக்கேற்ப வகுப்புகளில் சேர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

அதைத் தொடர்ந்து, பள்ளி செல்லா, இடைநின்ற குழந்தைகளின் கற்றல் திறன் அடிப்படையில் இணைப்பு சிறப்பு பயிற்சி மையங்கள் மற்றும் உண்டு உறைவிட சிறப்பு பயிற்சி மையங்களில் சேர்க்கப்பட்டு, பயிற்சி அளித்து கல்வியாண்டின் இறுதியில் முறையான பள்ளிகளில் சேர்க்கப்பட்டு தொடர் கல்வியும் அளிக்கப்படும். மாற்றுத் திறறனாளி குழந்தைகள் உடல் நிலைக்கு ஏற்றாற் போல் வீட்டுவழிக் கல்வி, பள்ளி ஆயத்த பயிற்சி மையம், முறையான பள்ளிகளில் சேர்த்து பயிற்சி அளிக்கப்படும்.

எனவே 6 முதல் 18 வயதுடைய பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற குழந்தைகள், புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகள் மற்றும் 1 முதல் 18 வயதுடைய மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளைக் கண்டறிந்தால், ஒருங்கிணைந்த கல்வி, மாவட்ட திட்ட அலுவலகத்துக்கு தெரியப்படுத்தலாம். மேலும், இதுகுறித்து ஒருங்கிணைந்த கல்வி திருவள்ளூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் மாவட்ட திட்ட அலுவலகத்துக்கு 9788859103, 9788859102 ஆகிய செல்போன் எண்களில் தொடர்பு கொண்டு விவரங்களைத் தெரிவிக்கலாம் எனவும் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

The post மாவட்டத்தில் பள்ளி செல்லா, இடைநின்ற மாற்றுத்திறன் குழந்தைகள் கணக்கெடுப்புப் பணி மும்முரம் appeared first on Dinakaran.

Tags : Chella ,Thiruvallur ,Thiruvallur Integrated Education District ,School Sella ,
× RELATED திருவள்ளூர் அருகே தொழிற்சாலை வாகனங்கள் மோதி 12 பெண் தொழிலாளர்கள் படுகாயம்