×

திருவள்ளூர் அருகே தொழிற்சாலை வாகனங்கள் மோதி 12 பெண் தொழிலாளர்கள் படுகாயம்

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே தனியார் கம்பெனி பஸ்சும் வேனும் மோதிக்கொண்டதில் 12 பெண் தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர். திருவள்ளூர் அருகே மேல்நல்லாத்தூர் பகுதியில் உள்ள பிரபல தனியார் தொழிற்சாலைக்கு நாராயணபுரம் பகுதியில் இருந்து ஒப்பந்த பெண் தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு வேன் சென்றது. இதன்பின்னர் பட்டரைபெரும்புதூர் பகுதியில் இருந்தும் ஒப்பந்த பெண் தொழிலாளர்கள் ஏறினர். அந்த சமயத்தில் இருங்காட்டுகோட்டையில் உள்ள தனியார் தொழிற்சாலை பேருந்து தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு வந்தது. திடீரென அந்த பஸ், அங்கு தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டிருந்த வேன் மீது வேகமாக மோதியது.

இந்த விபத்தில் காயம் அடைந்த பார்வதி, எழிலரசி, எம்.தேவி, தமிழரசி, லட்சுமி, டி.தேவி ஆகியோர் திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இதில் படுகாயம் அடைந்துள்ள கலாவதி, அஞ்சலி, ஆஷா, தமிழரசி, லட்சுமி ஆகியோர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து தகவல் கிடைத்ததும் திருவள்ளூர் தாலுகா போலீசார் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post திருவள்ளூர் அருகே தொழிற்சாலை வாகனங்கள் மோதி 12 பெண் தொழிலாளர்கள் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Tiruvallur ,Narayanapuram ,Mellallathur ,Thiruvallur.… ,Thiruvallur ,Dinakaran ,
× RELATED திருவள்ளூர் அருகே குடும்ப தகராறில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை