
டொராண்டோ; கனடாவில் உள்ள இந்து கோயில் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. கனடாவில் இந்து கோயில் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே 3 முறை அங்குள்ள இந்து கோயில்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. தற்போது ஒன்டாரியோ மாகாணத்தில் வின்ட்சர் நகரத்தில் நார்த்வே அவென்யூவில் உள்ள ஒரு கோயிலில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அந்த கோயிலில் இந்துக்கள் மற்றும் இந்தியாவுக்கு எதிரான எதிர்ப்பு வாசகங்களையும் தாக்குதல் நடத்திய கும்பல் சுவரில் எழுதிச்சென்றுள்ளது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்திய போது நள்ளிரவு 12 மணி அளவில் 2 பேர் கோயில் பகுதியில் சுற்றித்திரிவது சிசிடிவி காட்சிகள் மூலம் தெரிய வந்துள்ளது. அவர்களை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
The post கனடாவில் இந்து கோயில் மீது தாக்குதல் appeared first on Dinakaran.
