×

3வது முறையாக வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் மீது மீண்டும் கற்கள் வீச்சு: விசாகப்பட்டினத்தில் பரபரப்பு

ஆந்திரா: விசாகப்பட்டினத்தில் 3வது முறையாக வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மீது மீண்டும் கற்கள் வீசப்பட்டன. அதன் கண்ணாடிகள் உடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.பிரதமர் மோடி ஜனவரி 15ம் தேதி செகந்திராபாத் மற்றும் விசாகப்பட்டினத்தை இணைக்கும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இது நாட்டின் 8வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மற்றும் தெலுங்கானா-ஆந்திராவை இணைக்கும் முதல் எக்ஸ்பிரஸ் ரயில் ஆகும். சுமார் 700 கிமீ தொலைவை இந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில், 8.30 மணிநேரத்தில் கடக்கும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று விசாகப்பட்டினத்தில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் மீது மர்ம நபர்கள் கல் வீச்சு தாக்குதல் நடத்தினர். இதில் சி-8 கோச் ஜன்னல் கண்ணாடி உடைந்தது. இந்த வந்தே பாரத் விரைவு ரயிலில் கடந்த 3 மாதங்களில் கல் வீச்சு சம்பவம் நடப்பது இது 3வது முறையாகும். இதனால் விசாகப்பட்டினத்தில் இருந்து புறப்படும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் 5.45 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக 9.45 மணிக்கு புறப்படும் என மாற்றி அமைக்கப்பட்டது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், வந்தே பாரத் ரயில் பராமரிப்பு மற்றும் ரயில் ஓட்டத்திற்காக விசாகப்பட்டினத்தை வந்தடைந்தபோது, அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் கற்களை வீசினர். இச்சம்பவம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது. கல்வீசிய நபர்களை சிசிடிவி காட்சிகள் மூலம் போலீசார் தேடி வருகிறார்கள்’ என்றனர்.

The post 3வது முறையாக வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் மீது மீண்டும் கற்கள் வீச்சு: விசாகப்பட்டினத்தில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Stones ,Vande Bharat Express ,Vishakhapatnam ,Andhra ,Visakhapatnam ,
× RELATED இளம்பெண் வயிற்றில் 570 கற்கள் அகற்றம்