×

இளம்பெண் வயிற்றில் 570 கற்கள் அகற்றம்

திருமலை: ஆந்திர மாநிலம் டாக்டர் அம்பேத்கர் கோணசீமா மாவட்டம் தேவகுப்தம் கிராமத்தை சேர்ந்தவர் நரசவேணி(31). இவருக்கு கடந்த சில மாதங்களாக கடும் வயிற்று வலி இருந்துள்ளது. பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளார். இருப்பினும் வயிற்று வலிக்கு தீர்வு ஏற்படாமல் கடும் வேதனையடைந்தார். இதேபோன்று கடந்த 20ம் தேதி இரவு மீண்டும் வலி அதிகரித்ததால் அமலாபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அங்கு நரசவேணிக்கு டாக்டர்கள் ஸ்கேன் செய்து பார்த்தனர். அப்போது அவரது பித்தப்பையில் ஏராளமான கற்கள் இருப்பது தெரியவந்தது. அவற்றால் இளம்பெண்ணின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் உடனடியாக அவற்றை பித்தப்பையுடன் சேர்த்து அகற்ற முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து நேற்று அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

இளம்பெண்ணின் பித்தப்பையில் மொத்தம் 570 கற்கள் இருந்தன. அவற்றை பித்தப்பையுடன் அகற்றப்பட்டது. இந்த அறுவை சிகிச்சையை 5க்கும் மேற்பட்ட டாக்டர்கள் வெற்றிகரமாக செய்து முடித்தனர். அறுவை சிகிச்சைக்கு பின் இளம்பெண்ணின் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என டாக்டர்கள் தெரிவித்தனர்.

The post இளம்பெண் வயிற்றில் 570 கற்கள் அகற்றம் appeared first on Dinakaran.

Tags : Tirumala ,Narasaveni ,Devaguptam village ,Dr. ,Ambedkar Konaseema district ,Andhra ,
× RELATED வேங்கடவனை நினைக்க வினைகள் அகலும்!