×

கருவலூர் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்

அவிநாசி, ஏப்.6: அவிநாசி ஒன்றியம் கருவலூரில் புகழ்பெற்ற மாரியம்மன் கோவில் தேரோட்டம் நேற்று மாலையில் கோலாகலமாக நடைபெற்றது. அவிநாசி ஒன்றியம் கருவலூரில் பழமையான மாரியம்மன் கோயில் உள்ளது. இதன் தேர்த்திருவிழா ஏபரல் முதல் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி சிறப்பு பூஜைகள் மற்றும் திருவீதி உலா வருதல் நடைபெற்றன. முக்கிய நிகழ்ச்சியாக நேற்று அதிகாலைமாரியம்மன் திருத்தேருக்கு எழுந்தருளல் நடைபெற்றது. மாலை திருத்தேர் வடம்பிடித்து இழுத்தலும், தேரோட்டமும் நடைபெற்றது. விழாவில், பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், சரவணம்பட்டி சிரவை அதீனம் குமர குருபர சுவாமிகள், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் குமரதுரை, உதவி ஆணையர் செந்தில்குமார், ஆய்வாளர் செல்வப்பிரியா, அவிநாசி போலீஸ் டி.எஸ்.பி. பவுல்ராஜ், மாவட்ட அறங்காவலர் குழு நியமனத்தலைவர் கீர்த்தி சுப்பிரமணியம்,

கருவலூர் முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் அவிநாசியப்பன், கருவலூர் ஊராட்சி மன்றத்தலைவர் முருகன், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் சத்தியபாமா அவிநாசியப்பன், நம்பியாம்பாளையம் ஊராட்சி மன்றத்தலைவர் பாக்யலட்சுமி முத்துசாமி மற்றும் ஆன்மீகப் பெரியவர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டு திருத்தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர். விழாவில், அன்னூர், கருவலூர், அவிநாசி, சேவூர், தெக்கலூர், நம்பியாம்பாளையம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். விழாவில் அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம், மகாதீபாரதனைகள் நடைபெற்றன. தேர்த்திருவிழா ஏற்பாடுகளை, கோயில் செயல் அலுவலர் குழந்தைவேல், மற்றும் பரம்பரை அறங்காவலர் குழுத்தலைவர் லோகநாதன், பரம்பரை அறங்காவலர்கள் அர்ச்சுணன், தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட விழாக்குழுவினர் செய்துள்ளனர்.

The post கருவலூர் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம் appeared first on Dinakaran.

Tags : Karuvalur Mariamman Temple ,Thorotam Temple ,Avinasi ,Mariamman Temple ,Avinasi Union Karavalur ,Avinasi Union ,
× RELATED நீர்வளத்துறை அலுவலகத்தில் காலிப்பணியிடம் விண்ணப்பிக்க அழைப்பு