×

கோவையில் புகார்கள் குவிகிறது ‘தீபாவளி பர்சேஸ்’ கூட்டத்தில் கைவரிசை-பெண் உட்பட 2 பேர் கைது

கோவை : கோவையில் தீபாவளி பர்சேஸ் கூட்டத்தை குறி வைத்து நகை, பணம் பறிக்கும் கும்பலை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். கோவை சின்னவேடம்பட்டி ராமர்கோயில் தெருவை சேர்ந்தவர் வெங்கடம்மாள் (55). இவர் சரவணம்பட்டி விசுவாசபுரம் ரோட்டில் மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் பைக்கில் வந்த 2 நபர்கள் திடீரென வெங்கடம்மாளின் கழுத்தில் கிடந்த 1.5 பவுன் தங்க நகையை பறித்தனர். வெங்கடம்மாள் திருடர்களை விரட்டி செல்ல முயன்றார். ஆனால் அவர்கள் வேகமாக சென்று தப்பினர். சரவணம்பட்டி  போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர் பழனிசாமி என்பவர் மகள் சங்கீதா (24). இவர் நேற்று முன் தினம் ஈரோட்டில் இருந்து கோவை வந்தார். பின்னர் வடவள்ளியில் இருந்து தனியார் பஸ்சில் காந்திபுரம் டவுன் பஸ் ஸ்டாண்ட் சென்றார். பஸ்சில் இருந்து இறங்கியபோது கழுத்தில் அவர் அணிந்திருந்த 1 பவுன் தங்க நகையை காணவில்லை. கூட்ட நெரிசலை பயன்படுத்தி நகையை திருடர்கள் பறித்து சென்றுவிட்டதாக தெரிகிறது. காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.சிங்காநல்லூர் ஜெயாநகரை சேர்ந்தவர் பரணிதரன் (19). தனியார் நிறுவன ஊழியர். இவர் கிருஷ்ணா கார்டன் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இவரை வழிமறித்த வாலிபர் ஒருவர் கத்தி காட்டி மிரட்டி பரணிதரனின் செல்போனை பறித்து கொண்டு தப்பினார். இது குறித்த புகாரின் பேரில், செல்போன்பறிப்பில் ஈடுபட்ட சிங்காநல்லூர் நீலிகோணாம்பாளையத்தை சேர்ந்த அரவிந்தகுமார் (19) என்பவரை கைது செய்தனர்.ஆர்.எஸ்.புரம் சுந்தரம் வீதியை சேர்ந்தவர் தமிழ்செல்வி (42). இவர் டவுன்ஹாலில் இருந்து டவுன்பஸ்சில் ஆர்.எஸ்.புரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். பஸ் நிறுத்தத்தில் இவர் இறங்க முயன்றபோது அருகே நின்ற பெண் பேக்கில் இருந்த பணத்தை திருடி தப்ப முயன்றார். இதை பார்த்த தமிழ்செல்வி அவரை சக பயணிகளுடன் சேர்ந்து மடக்கி பிடித்து ஆர்.எஸ்.புரம் போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில் அவர் ஊட்டி காக்கா சத்திரத்தை சேர்ந்த சீனிவாசன் மனைவி முத்துமாரி (26) என தெரியவந்தது. போலீசார் இவரை கைது செய்தனர். தீபாவளி கூட்ட நெரிசலில் நகை பணம் திருட திட்டம் போட்டு இவர் கோவைக்கு வந்ததாக தெரிகிறது. இவரைபோல் மேலும் சிலர் தீபாவளி பர்சேஸ் கூட்டத்தில் கைவரிசை காட்ட குவிந்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளனர்….

The post கோவையில் புகார்கள் குவிகிறது ‘தீபாவளி பர்சேஸ்’ கூட்டத்தில் கைவரிசை-பெண் உட்பட 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Diwali Purchase ,Diwali ,
× RELATED ரூ.6 கோடி போதை பொருள் கடத்திய இந்து மக்கள் கட்சி நிர்வாகி அதிரடி கைது