×

அரசு மற்றும் மாநகராட்சிகளை சேர்ந்த 550 பள்ளி வளாகங்களில் நாப்கின் எரியூட்டிகளை பொருத்த வேண்டும்: முதல்வர்களுக்கு அரசு அறிவுறுத்தல்

புதுடெல்லி: பள்ளி வளாகங்களில் புகை கட்டுப்பாடு யூனிட்டுடன் கூடிய நாப்கின் எரியூட்டிகளை (இன்சினரேட்டர்கள்) பொருத்துமாறு அரசுப்  பள்ளிகள் மற்றும் மாநகராட்சிகளின் கீழ் இயங்கும் 550 பள்ளிகளை சேர்ந்த முதல்வர்களுக்கு டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது. இதுபற்றி பள்ளி கல்வி இயக்குநரகம் அனைத்து பள்ளி முதல்வர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது: அரசு மற்றும் மாநகராட்சிகளை சேர்ந்த 553 பள்ளிகளில் உள்ள 3,204 கழிப்பறைகளில் நாப்கின் எரியூட்டிகளை பொறுத்த வேண்டும். இதற்கான பணிகளை கல்வி அமைச்சகத்தின் திட்டப்பணிகளுக்கான வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. எனவே, சம்மந்தப்பட்ட பிரதிநிதியுடன் பள்ளி முதல்வர்கள் கலந்தாலோசனை செய்து, கழிப்பறைகளில் எந்த இடத்தில் நாப்கின் எரியூட்டிகளை பொருத்த வேண்டும் என்பதை இடம் தேர்வு செய்து கொடுக்க வேண்டும். அதோடு, அதற்கான பிளக் பாயிண்டுகள், மின்சார வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும். இதற்கு ஆகும் செலவுகள் அனைத்தும் வித்யாலயா கல்யாண் சமிதி நிதியிலிருந்து வழங்கப்படும். அல்லது நிதியுதவி அளிக்கப்படும். ஒருவேளை, பவர் பாயிண்டுகள் குறிப்பிட்ட காலத்திற்குள் முதல்வர்கள் அமைத்து தராவிட்டால், சம்மந்தப்பட்ட பிரதிநிதியின் தரப்பில் இருந்து பொருத்தி சரிபார்க்கப்பட வேண்டும். முதல்வர் சரிபார்த்தபின்னர் உரிய தொகையை பிரதிநிதிக்கு பின்னர் வழங்கப்படும். எரியூட்டிகளை பொருத்துவதற்கான அனைத்து உதவிகளையும் பள்ளி முதல்வர்கள் வழங்க வேண்டும். இந்த சானிட்டரி நாப்கின் எரியூட்டிகளுக்கான பொறுப்பாளர்களாக பள்ளியின் ஆய்வக பெண் உதவியாளர் அல்லது பெண் அறிவியல் ஆசிரியரை நியமிக்க வேண்டும். மேலும், இந்த எரியூட்டிகளை மாணவிகள் பயன்படுத்துவது குறித்து விளக்கத்தை ஒவ்வொரு நாளும் வகுப்பு இல்லாத ஆசிரியை விளக்கம் அளிப்பதோடு, அட்டவணை தயாரித்து தினசரி மாணவிகள் பிற 5ம் வகுப்பு முதல் உயர் வகுப்பு மாணவிகளுக்கு எரியூட்டிகளை பயன்படுத்த கற்றுத்தர வேண்டும். இந்த பயிற்சியை அனைவரும் நன்கு அறிந்துகொள்ளும் வரை தினசரி அடிப்படையில் விளக்கம் அளிக்கப்பட வேண்டும். காலையில் தொடங்கி மாலையில் செல்லும் போது எரியூட்டியை ஆப் செய்துவிட்டு செல்வது வரை பயிற்றுவிக்க வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது….

The post அரசு மற்றும் மாநகராட்சிகளை சேர்ந்த 550 பள்ளி வளாகங்களில் நாப்கின் எரியூட்டிகளை பொருத்த வேண்டும்: முதல்வர்களுக்கு அரசு அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : New Delhi ,
× RELATED ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்று டிஜிட்டல் கேஒய்சி