×

சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு: கடைக்காரர் கண்ணீர் சாட்சியம்

மதுரை: சாத்தான்குளம் வியாபாரிகள் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் போலீசாரால் துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கின் விசாரணை மதுரை முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கு நீதிபதி பத்மநாபன்முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதற்காக சிறையிலுள்ள இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்ஐ ரகுகணேஷ் உள்ளிட்ட 9 பேரும் ஆஜர்படுத்தப்பட்டனர். ஜெயராஜின் கடை அருகே கடை வைத்திருக்கும் இசக்கிதுரை என்பவரிடம் சாட்சி விசாரணை நடந்தது.அப்போது இசக்கிதுரை, ‘‘சம்பவம் நடந்ததற்கு முந்தைய நாளான ஜூன் 18ல் எஸ்ஐ பாலகிருஷ்ணன் சாத்தான்குளத்தில் ஜெயராஜ் கடையின் அருகே பொதுமக்களிடம் தகாத முறையில் பேசினார். அங்கிருந்த ஜெயராஜ் தனது அருகில் நின்று கொண்டிருந்தவர்களிடம் இதுபோன்று பொதுமக்களிடம் கண்ணியக் குறைவாக நடக்கும் காவல்துறையினர் மீதுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இவ்வாறு கூறிய மறுநாளே போலீசார் அவரை அழைத்துச் சென்றனர்’’ என தெரிவித்தார். இதை தொடர்ந்து பென்னிக்ஸ் குறித்து பேசியபோது இசக்கிதுரை கண்கலங்கியபடி சாட்சியமளித்தார். அப்போது, இசக்கிதுரையிடம் குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை அக். 25க்கு தள்ளிவைத்தார்….

The post சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு: கடைக்காரர் கண்ணீர் சாட்சியம் appeared first on Dinakaran.

Tags : Satankulam ,Madurai ,Jayraj ,Pennyx ,Dinakaran ,
× RELATED சாத்தான்குளம் தேவாலயத்தில் சுற்றுச்சூழல் ஞாயிறு கொண்டாட்டம்