×

தலைமை தபால் நிலையத்தில் நாளை ஆதார் சிறப்பு முகாம்

கோவை: கோவை அஞ்சல் கோட்டம் சார்பில் இரண்டு நாள் ஆதார் சிறப்பு முகாம் நடக்கிறது.  இந்த முகாம், நாளை, நாளை மறுநாள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கூட்செட் ரோட்டில் உள்ள தலைமை தபால்நிலையத்தில் நடக்கிறது. இதில், புதிய ஆதார் பதவி, கருவிழி மற்றும் கைரேகை கட்டாய புதுப்பிப்பு, இலவசம் பெயர், முகவரி, மொபைல் எண், பிறந்த தேதி சேர்த்தல் மற்றும் புதுப்பித்தல் ஆகியவற்றிக்கு ரூ.50, புகைப்படம், கருவிழி மற்றும் கைரேகை புதுப்பித்தல் ஆகியவற்றிக்கு ரூ.100 கட்டணமாகும். இந்த சிறப்பு முகாமை அனைவரும் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Tags : Aadhaar Special Camp ,Head Post Office ,
× RELATED கஞ்சா விற்ற வாலிபர் கைது