×

விழுப்புரம் அருகே பிளஸ்-1 மாணவி கடத்தல்

விழுப்புரம், மார்ச் 23: விழுப்புரம் அருகே பிளஸ்-1 மாணவியை கடத்திய புதுச்சேரி வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். விழுப்புரம்  அருகே எல்.ஆர்.பாளையத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி விழுப்புரம்  அரசு மாதிரி மகளிர்மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார்.  கடந்த 20ம் தேதி பள்ளிக்குச்சென்ற அவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து  அவரது பெற்றோர் உறவினர்கள், தோழிகள் வீடுகளில் தேடிபார்த்தும்  கிடைக்கவில்லை.
இதனையடுத்து அவரது தாய் விழுப்புரம் அனைத்து மகளிர்  காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதில் புதுச்சேரி மாநிலம் நல்லாவூரைச்  சேர்ந்த அய்யனார் என்ற வாலிபர்தான் ஆசைவார்த்தைகளை கூறி  கடத்திச்சென்றுவிட்டதாக தெரிவித்தார். இதனையடுத்து அய்யனார் மீது போலீசார்  வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Villupuram ,
× RELATED கோடை விடுமுறைக்கு பின் விழுப்புரம்,...