×

பண்ருட்டி அருகே பரபரப்பு சாமி சிலைகள் இருப்பதாக கூறி 20 அடி வரை பள்ளம் தோண்டி பூஜை

பண்ருட்டி, மார்ச் 21: பண்ருட்டி அருகே ஆண்டிக்குப்பம் பகுதியில் உள்ள ஒரு இடத்தின் உரிமையாளர் சம்மந்தமூர்த்தி. வெளிநாட்டில் கோயில் பூசாரி. இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளிநாட்டிலிருந்து பண்ருட்டிக்கு வந்தார். பின்னர் தனக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்ட போகிறேன் என கூறி முட்புதர்களை அகற்றி 20 அடி ஆழத்துக்கு பள்ளம் தோண்டினார். அந்த பள்ளத்தில் அவர் பூஜை செய்துள்ளார். நரபலிக்காக பூஜை செய்ய உள்ளார் என அப்பகுதி மக்கள் மத்தியில் வதந்தி பரவியது. சந்தேகமடைந்த கவுன்சிலர் ரமேஷ், வருவாய்த் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தாசில்தார் ஆனந்தி மற்றும் அலுவலர்கள் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது சம்மந்தமூர்த்தியிடம் யார் அனுமதி பெற்று பள்ளம் தோண்டினீர்கள் எனக்கேட்டு அவரை எச்சரித்தனர். அவ்வாறு சாமி சிலைகள் இருப்பது உண்மையானால், அதனை தோண்டி எடுக்க ஆட்சியரிடம் அனுமதி பெற்று தான் முடிவு செய்ய வேண்டும் என அறிவுரை வழங்கினர். பின்னர் தோண்டிய பள்ளத்தை அதிரடியாக ஊழியர்கள் உதவியுடன் மூடி சமன் செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Pooja ,Sami ,Panruti ,
× RELATED தமிழ்புத்தாண்டை முன்னிட்டு...