கடையம்: கடையம் அருகே சேர்வைகாரன்பட்டி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் கடையம் வட்டார வளர்ச்சி அதிகாரி ராஜசேகரன் தலைமை தாங்கினார். மண்டல துணை வட்டார வளர்ச்சி அதிகாரி பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் ரவிச்சந்திரன் வரவேற்றார். கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அதிகாரி ராஜசேகரன், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் பயன்பெறும் பல்வேறு துறைகளின் பணிகள் குறித்து விளக்கமாக பேசினார். கூட்டத்தில் வட்டார கல்வி அதிகாரி குருசாமி, தோட்டக்கலை துறை உதவி அதிகாரி இசக்கியம்மாள், விவசாயத்துறை உதவி அதிகாரி கிருஷ்ணமூர்த்தி, கிராம நிர்வாக அதிகாரி அருணாசலம், திமுக கிளை செயலாளர்கள் ராஜேந்திரன், செல்வராஜ், கலைச்செல்வன், நடராஜன், தேன்ராஜ் நவீன் கிருஷ்ணா, அருணகிரி பாண்டி, ராமசாமி, முப்புடாதி, சுய உதவிக்குழு ஒருஙகிணைப்பாளர் காளியம்மாள், செல்வ லெட்சுமி, மாட கண்ணு, பத்திரகாளி, முப்புடாதி, ரேவதி உட்பட பலர் கலந்து கொண்டனர். வார்டு உறுப்பினர் சந்தன ரோஜா நன்றி கூறினார்.
