×

முதலமைச்சரின் புகைப்பட கண்காட்சி திரண்டு பார்த்த கல்லூரி மாணவிகள்

மதுரை, மார்ச் 20: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 70 ஆண்டுகால வாழ்க்கை பயணத்தை வெளிப்படுத்தும் கண்காட்சியை கல்லூரி மாணவிகள் பார்த்தனர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மதுரை திருப்பாலை மேனேந்தல் பகுதியில் அவரின் 70 ஆண்டு கால வாழ்க்கை வரலாற்றை வெளிப்படுத்தும் வகையில் புகைப்பட கண்காட்சி நேற்று தொடங்கியது. முதலமைச்சரின் வாழ் க்கை வரலாற்றை விளக்கும் புகைப்படக் கண்காட்சியை கல்லூரி மாணவிகள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானவர்கள் வந்து பார்த்து செல்கின்றனர்.

மதுரை வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் மீனாட்சி அம்மன் கோவில் அறங்காவலர் கருமுத்து கண்ணன், அமெரிக்கன் கல்லூரி முதல்வர் தவமணி கிறிஸ்டோபர் திறந்து வைத்தனர். இந்த புகைப்படக்கண்காட்சியை நகைச்சுவை நடிகர் வடிவேலு பார்வையிட்டார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் 70 ஆண்டுகால வரலாற்றை எடுத்துக் கூறும் வகையில் அவரது சிறுவயது படங்கள் முதல் தற்போது முதல்வராக பொறுப்பேற்று தொடங்கி வைத்துள்ள திட்டங்கள் வரையிலான பல்வேறு காலகட்ட புகைப்படங்களை இடம் பெற்று இருந்தன.

கொரோனா காலத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துணிச்சலுடன் கொரோனா பாதித்தவர்களின் வார்டுகளுக்கு சென்று பார்வையிட்ட புகைப்படங்களை பார்த்து நடிகர் வடிவேலு வியந்தார். இந்நிகழ்ச்சியில் மாநகர் அவைத்தலைவர் ஒச்சுபாலு, துணைச்செயலாளர்கள் சின்னம்மாள், ராகவன், மூவேந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ஆறுமுகம், வைகைபரமன், மாநில கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணைச்செயலாளர் வீரகணேசன், மாநில விவசாய தொழிலாளரணி துணைச்செயலாளர் பாக்கியநாதன், மாநில விவசாய
அணி துணைச்செயலாளர் கணேசன், மாநகராட்சி மண்டலத்தலைவர் வாசுகிசசிக்குமார், வட்டச்செயலாளர்கள் ராஜேஸ், காத்தவராயன், வடக்கு மாவட்ட பொருளாளர் சோமசுந்தரபாண்டியன், அவைத்தலைவர் பாலசுப்பிரமணியன், மாவட்ட பிரதிநிதி திருமோகூர் சரவணன், ஒன்றியச்செயலாளர்கள் ரகுபதி, சிறைச்செல்வம், பொதும்பு தனசேகர், பேரூராட்சி தலைவர்கள் பால்பாண்டியன், ஜெயராமன், ரேணுகாஈஸ்வரி, தலைமை செயற்குழு உறுப்பினர் சேகர், பகுதிச்செயலாளர்கள் சசிக்குமார், மருதுபாண்டியன், வக்கீல் கலாநிதி, ஒத்தக்கடை சரவணன், திருமங்கலம் நகராட்சி துணை சேர்மன் ஆதவன்அதியமான் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Tags : Chief Minister ,
× RELATED தனிக்கட்சி தொடங்குகிறார் ஓ.பன்னீர்செல்வம்?