×

ஆயுதப்படை போலீசாருக்கு பயிற்சி

கோவை, மார்ச் 19:  கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில், ஆயுதப்படை போலீசாரின் வாராந்திர அணிவகுப்பு நேற்று காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கோவை மாநகர ஆயுதப்படையை சேர்ந்த போலீசார் கலந்து கொண்டனர். இதில் உடற்பயிற்சிகள், ஆர்ப்பாட்டங்களை கட்டுப்படுத்துதல், உடலுக்கு வலு சேர்க்கும் பயிற்சிகள், அணிவகுப்பு முறைகள் குறித்த பயிற்சி வழங்கப்பட்டது. மாநகர ஆயுதப்படை உதவி கமிஷனர் சேகர் நேரில் பார்வையிட்டார். 100க்கும் மேற்பட்ட போலீசார் பயிற்சி பெற்றனர்.

Tags : Armed Forces Police ,
× RELATED கஞ்சா விற்ற வாலிபர் கைது