வடமாநில தொழிலாளர்களுடன் எஸ்.பி., ரூரல் டிஎஸ்பி சந்திப்பு

ஏற்காடு, மார்ச் 16:  ஏற்காடு மற்றும் மல்லூர் பகுதியில் தங்கி பணியாற்றி வரும் வடமாநில தொழிலாளர்களை நேரில் சந்தித்த சேலம் எஸ்பி சிவகுமார், ரூரல் டிஎஸ்பி தையல்நாயகி ஆகியோர் சந்தித்து பாதுகாப்பு குறித்து கலந்துரையாடினார். அப்போது ஏற்காடு இன்ஸ்பெக்டர் செந்தில் ராஜ்மோகன் மற்றும் போலீசார், ஏற்காட்டில் உள்ள தனியார் தோட்டங்களுக்கு சென்றனர். ஏற்காடு சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தனியார் தோட்டங்களில் மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், பீகார், அசாம் போன்ற மாநிலங்களில் இருந்து, சுமார் 250க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்கி, கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக கூலித்தொழிலாளிகளாக வேலை செய்து வருகின்றனர்.

அவர்களிடம் டிஎஸ்பி தையல்நாயகி, இளையதளங்களில் வரும் வதந்திகளை நம்ப வேண்டாம், தமிழகம் அமைதி பூங்கா, வன்முறைக்கு இடமில்லை. நீங்கள் சுதந்திரமாக செயல்படலாம்.

யாராவது தொல்லை கொடுத்தால் உடனடியாக காவல் துறை உதவி எண்ணுக்கு தொடர்பு கொள்ளுங்கள். பொது இடங்கள், கடை வீதி போன்ற பகுதிகளில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள். இங்கு அமைதியாக வேலை செய்வதை, உங்களது குடும்பத்திற்கு தெரிவிக்கவும். சுதந்திரமாக இருங்கள் என இந்தியில் அவர்களிடம் உரையாடினார். நிகழ்ச்சியின் போது தனியார் தோட்ட பணியாளர்கள் உடனிருந்தனர். மல்லூர்: மல்லூர் அடுத்த சந்தியூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் வடமாநில தொழிலாளர்களுடன், எஸ்பி., சிவக்குமார், சேலம் ரூரல் டிஎஸ்பி தையல்நாயகி ஆகியோர் கலந்துரையாடினர். நிகழ்ச்சியில் மல்லூர் இன்ஸ்பெக்டர் கலையரசி, எஸ்ஐ தங்கவேல் உள்ளிட்ட போலீசார், தனியார் நிறுவனங்களின் மேலாளர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: