×

பெருந்துறை அருகே பரிதாபம் கார்கள் மோதிய விபத்தில் 2 பெண்கள் பலி

பெருந்துறை: ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே கார்கள் மோதிய விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்தனர். ஈரோடு, பெரிய சேமூர், பாரதிநகர் பகுதியை சேர்ந்த தர்மலிங்கம் மகன் புகழேந்தி (28). இவர் நேற்று மதியம் ஈரோட்டில் இருந்து கோவை செல்வதற்காக, தனது தந்தை தர்மலிங்கம் (50), தாய் பானுமதி (42), அத்தை அபிராமி (34), தங்கை கனிமொழி (26) மற்றும் வளர்ப்பு தம்பி முகமது அப்பாஸ் (8) ஆகியோருடன் காரில் புறப்பட்டனர். கார் பெருந்துறையை அடுத்துள்ள ஓலப்பாளையம், பைபாஸ் பிரிவு பகுதியில் உள்ள மேம்பாலம் அருகே வந்தது. அப்போது பின்னால் கோவையை நோக்கி மற்றொரு கார் வந்தது. எதிர்பாராதவிதமாக 2 கார்களும் மோதின. இந்த விபத்தில்
படுகாயம் அடைந்த அபிராமி, கனிமொழி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

தர்மலிங்கம், பானுமதி மற்றும் அப்பாஸ் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பலியானர்களின் உடல்களை போலீசார் அதே மருத்துவமனகை்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து பெருந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்குப் பதிவு மற்றொரு காரை ஓட்டி வந்த கோவையை சேர்ந்த விக்ரம் என்பவரை கைது செய்து, விசாரித்து வருகிறார்.

Tags : Parithapam ,Perundurai ,
× RELATED கடன் பிரச்னை காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை