×

முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டு தென்னிந்திய பைக் ரேஸ் போட்டிகளை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் துவக்கி வைத்தார்

மதுக்கரை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு கோவை ஈச்சனாரியில்  நடைபெற்ற தென்னிந்திய அளவிலான பைக் ரேசில் கலந்து கொண்ட வீரர்களுக்கு  வாழ்த்து தெரிவித்து, தெற்கு மாவட்ட திமுக செயலாளர் தளபதி முருகேசன்  கொடியசைத்து போட்டியை துவக்கி வைத்தார். திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு கோவை தெற்கு மாவட்ட திமுக பிரதிநிதி மேட்டூர் ஜெகதீஷ் ஏற்பாட்டில் தளபதி டிராபிக்கான இரண்டாம் ஆண்டு பைக் ரேஸ் போட்டி நேற்று நடைபெற்றது. கோவை ஈச்சனாரி ரத்தினம் கல்லூரி எதிரிலுள்ள மைதானத்தில் நடைபெற்ற போட்டி துவக்க நிகழ்ச்சிக்கு பகுதி செயலாளர் கார்த்திக், ஒன்றியக்குழு துணைத்தலைவர் பிரகாஷ், வார்டு செயலாளர் மாணிக்கம் ஆகியோர் முன்னிலை  வகித்தனர். கோவை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் தளபதி முருகேசன் வீரர்களுக்கு கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்து கொடியசைத்து துவக்கி வைத்தார்.

தென்னிந்திய அளவில் நடைபெற்ற இந்த போட்டியில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்துகொண்டனர். வழக்கமான பைக் ரைடு போல் இல்லாமல் பரபரப்பாக, மைதானத்தில் புழுதி பறக்க போட்டிகள் நடந்தன. சிறுவர்களுக்கு 3 லேப், பெண்களுக்கு 6 லேப், ஆண்களுக்கு 12 லேப் என்கிற அடிப்படையில் போட்டி நடத்தப்பட்டன. முடிவில் வெற்றி பெற்றவர்களுக்கு தளபதியார் டிராபியும் பரிசு, பதக்கம், ரொக்க பணமும் வழங்கப்பட்டது.




Tags : South District ,DMK ,South Indian Bike Race ,Chief Minister ,
× RELATED கஞ்சா விற்ற வாலிபர் கைது