×

மயிலாடும்பாறை அருகே சுடுகாட்டிற்கு தார்ச்சாலை அவசியம் பாலமும் கட்டித் தர கோரிக்கை

வருசநாடு: மயிலாடும்பாறை அருகே உள்ள பொன்னன்படுகை ஊராட்சியில் கொங்கரவு கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள சுடுகாட்டிற்கு சாலை, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதி வேண்டி பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.  இதனை தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிகாரிகள் சுடுகாட்டு பகுதிக்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அவர்களிடம் சுடுகாட்டிற்கு செல்லும் சாலையின் குறுக்கே சிறு பாலம் கட்டி கொடுக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து சுடுகாட்டிற்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இது குறித்து பொன்னன்படுகை ஊராட்சி மன்ற தலைவர் பூங்காகாத்தமுத்து கூறுகையில், ஏற்கனவே கிராம சபை கூட்டங்களில் சாலைகள் சிறு பாலம் உள்ளிட்ட வசதிகள் குறித்து  தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. விரைவில் நிதி வந்தவுடன் இப்பணி செயல்படுத்தப்படும் என்றார்.

Tags : Shudukat ,Mayiladumpara ,
× RELATED க.மயிலாடும்பாறை ஒன்றியத்தில் அரசு...