×

பெண் மக்கள் பிரிதிநிதிகளை சுயமாக செயல்பட அனுமதிக்க வேண்டும்: மாதர் சம்மேளனம் வலியுறுத்தல்

நாகப்பட்டினம், மார்ச் 10: பெண் மக்கள் பிரதிநிதிகள் சுயமாக செயல்பட அனுமதிக்க வேண்டும் என இந்திய தேசிய மாதர் சம்மேளனம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, நாகப்பட்டினம் அவுரித்திடலில் இந்திய தேசிய மாதர் சம்மேளனம் சார்பில் நாகப்பட்டினம் அவுரித்திடலில் கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் மேகலா தலைமை வகித்தார்.

மாவட்டத் தலைவர் லெட்சுமிபிரியா வரவேற்றார். பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். பாலியல் வன்கொடுமையை தடுக்க வேண்டும். 33 சதவீதம் இட ஒதுக்கீட்டை அமல் படுத்த வேண்டும். மற்றவர்கள் குறுக்கீடு இல்லாமல் பெண் மக்கள் பிரதிநிதிகள் சுயமாக செயல்பட அனுமதிக்க வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Tags : Matar Sammelanam ,
× RELATED மாதர் சம்மேளனம் கண்டன ஆர்ப்பாட்டம்