×

மாதர் சம்மேளனம் கண்டன ஆர்ப்பாட்டம்

 

சிவகங்கை, மார்ச் 13: சிவகங்கை அரண்மனைவாசல் முன் இந்திய தேசிய மாதர் சம்மேளனம் சார்பில் மகளிர் தின பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. துப்புரவு தொழிலாளர்களுக்கு கொடுக்க வேண்டிய நிலுவை சம்பள பாக்கியை உடனடியாக கொடுக்க வேண்டும். ஊராட்சிகளில் பணிபுரியும் சுகாதார ஊக்குனர்களுக்கு மாதந்தோறும் 15ம் தேதிக்குள் சம்பளம் வழங்குவதை
அரசு உறுதி செய்ய வேண்டும்.

நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தில் 33சதவீத இட ஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்த வேண்டும். தமிழகத்தில் இளம் தலைமுறையை பாதிக்கும் கஞ்சா விற்பனையை கண்காணித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில தலைவர் குணசேகரன் தலைமை வகித்தார். மாதர் சம்மேளன மாவட்ட செயலாளர் பாண்டிமீனாள், மாவட்டத்தலைவர் மஞ்சுளா கண்டன உரையாற்றினர். இ.கம்யூனிஸ்ட் சிவகங்கை நகர செயலாளர் மருது, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் கிருஷ்ணசாமி, மாவட்ட நிர்வாகிகள் பீட்டர், கீதா, வீரம்மாள், துரைராஜ், ராஜேந்திரன் மற்றும் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

The post மாதர் சம்மேளனம் கண்டன ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Mathar Sammelanam ,Sivagangai ,Indian National Mother Sammelana ,Panchayats ,Matar Sammelanam ,
× RELATED கோடைகால பயிற்சி முகாம் இன்று துவக்கம்