×

திருவாரூர் எஸ்பி அலுவலகத்தில் சிறப்பு குறைதீர் முகாம்

திருவாரூர்: திருவாரூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் 12வது சிறப்பு குறை தீர் கூட்டம் நேற்று நடந்தது. இதில், எஸ்பி அலுவலகத்தில் ஏற்கனவே அளிக்கப்பட்ட மனுக்கள் மற்றும் முதல்வர் தனிப்பிரிவு மூலம் அளிக்கப்பட்ட மனுக்கள் போன்றவை சம்பந் தப்பட்ட காவல் நிலையங்களுக்கு அனுப்பப்பட்டு தீர்வு காண்பதற்கு உத்தர விடப்பட்ட நிலையில் அவ்வாறு அனுப்பப்பட்ட மனுக்களுக்கு தீர்வு காணப் பட்டுள்ளதாக என ஒவ்வொரு மனுதாரர்களையும் செல்போன் மூலம் நேரில் அழைத்து எஸ்பி அலுவலகத்தில் இருந்து விசாரணை மேற்கொள்ள பட்டது.இதில், 7 மனுதாரர்கள் நேற்று நேரில் வரவைக்கப்பட்டு எஸ்பி சுரேஷ்குமார் முன்னிலையில் விசாரணை நடத்தப் பட்டு தீர்வு காணப்பட்டது. புதிதாக 20 மனுக்கள் பெறப்பட்டு எஸ் பி சுரேஷ்குமார் முன்னிலையில் சம்பந்தப்பட்ட டிஎஸ்பிக்கள் மூலம் மனுக்கள் விசாரணை செய்யப்பட்டு தீர்வு காணப்பட்டது. இக்கூட்டத்தில் ஏ டி எஸ் பி வெள்ளத்துரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். திருவாரூர் மாவட்டத்தில் நன்னிலம், குடவாசல்,வலங்கைமான்,திருவாரூர்,திருத்துறைப்பூண்டி,கோட்டூர்,முத்துப்பேட்டை,கொரடாச்சேரி,மன்னார்குடி உள்ளிட்ட 10 வேளாண் கோட்டங்களிலும் குறுவை சாகுபடியை விவசாயிகள் முடித்தும் சம்பா மற்றும் தாளடிக்கான அறுவடை பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது.

Tags : Tiruvarur SP Office ,
× RELATED சரித்திர பதிவேடு குற்றவாளிகள் இருவர்...