×

மாசி மகத்தை முன்னிட்டு அன்னக்கொடை உற்சவம் 50 கிலோ தயிர்ச்சாதம் படைத்து ஆண்டாள் கோயிலில் சிறப்பு பூஜை

திருவில்லிபுத்தூர் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் மாசி மகத்தை முன்னிட்டு நேற்று அன்னக்கொடை உற்சவம் நடைபெற்றது. இதில் 50 கிலோ தயிர் சாதம் பிரத்தியேகமாக தயார் செய்யப்பட்டு ஆண்டாள், ரங்க மன்னருக்கு படைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மகம் தினத்தன்று அன்னக்கொடை உற்சவம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் நேற்று மாசி மகம் என்பதால் ஆண்டாள் கோவிலில் மதியம் அன்னக்கொடை உற்சவம் நடைபெற்றது. இதற்காக ஆண்டாள், ரங்க மன்னார் சர்வ அலங்காரத்தில் வெள்ளிக் குறடு மண்டபத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து பிரத்தியேகமாக தயார் செய்யப்பட்ட 50 கிலோ தயிர் சாதம் ஆண்டாள், ரங்கமன்னாருக்கு படைக்கப்பட்டது. பின்னர் சிறப்பு பூஜைகள் நடைபெற்று தயிர் சாதம் பக்தர்களுக்கு பிரசாதமாக விநியோகம் செய்யப்பட்டது. மாசி மகத்தை முன்னிட்டு நேற்று நடைபெற்ற அன்னக்கொடை உற்சவத்தில் ஆண்டாள், ரங்க மன்னாரை தரிசனம் செய்யவும் சிறப்பு பூஜைகளை காண்பதற்காகவும் திருவில்லிபுத்தூர் மட்டுமின்றி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்து சாமி தரிசனம் செய்தனர். அன்னக்கொடை உற்சவத்திற்கான ஏற்பாடுகளை ஆண்டாள் கோவில் தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி முத்துராஜ் தலைமையில் கோயில் ஊழியர்கள் செய்திருந்தனர்.

Tags : Anakgoda ,Masi Maagam ,Andal Temple ,
× RELATED குழந்தை வரம் தரும் க்ஷேத்ர பாலகர்