×

ஐயப்பன் எம்எல்ஏ பிறந்தநாள் விழா கவுன்சிலர் பிரகாஷ் நேரில் வாழ்த்து

கடலூர், மார்ச் 5:    கடலூர் தொகுதி எம்எல்ஏ ஐயப்பன் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதனை தொடர்ந்து கடலூர் மாநகராட்சி 3வது வார்டு சார்பில் தி.மு.க. கவுன்சிலர், கடலூர் மாவட்ட டிப்பர் லாரி உரிமையாளர் சங்க தலைவர் பிரகாஷ் தலைமையில் ஐயப்பன் எம்.எல்.ஏவுக்கு மாலை, சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். முன்னதாக ஐயப்பன் எம்.எல்.ஏ நலன் வேண்டி கடலூர் திருப்பாதிரிப்புலியூர் வீர ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. ஏழை, எளியோருக்கு நலத்திட்டம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் கடலூர் மூன்றாவது வார்டு ராமலிங்கம், விஜயகுமார், தெய்வநாயகம், முருகன், பாஸ்கர், அஷ்ரப் அலி, மணிகண்டன், பாலசந்தர், சதிஷ், ஆனந்த், சதாசிவம்,

மணிவண்ணன், செந்தில், விஜி, வசந்த், சிலம்பு மற்றும் பலர் கலந்துகொண்டனர். ஐயப்பன் எம்எல்ஏ பிறந்த நாளை முன்னிட்டு கூட்டுறவு சங்க தலைவர்கள் ஆதி பெருமாள், ரவிச்சந்திரன், ராமலிங்கம், ஊராட்சி மன்ற தலைவர்கள் ஞானபிரகாசம், மனோகர், முத்து, பிரகாஷ், கனகராஜ், லட்சுமி செக்யூரிட்டி சர்வீஸ் மேலாண் இயக்குனர் கேஜிஎஸ் தினகரன், கவுன்சிலர் சரத், தொழிலதிபர் உமாச்சந்திரன், ஊராட்சி துணைத் தலைவர் சாந்தி பழனிவேல், கவுன்சிலர் கர்ணன், ஓட்டுநர் பயிற்சி பள்ளி ரஷீத், சன்ரைட் பிரகாஷ், பகுதி செயலாளர் சலீம், முன்னாள் தலைவர் ஜெயமூர்த்தி, சுதாகர், எல்ஐசி வேணு உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

Tags : Ayyappan ,MLA ,Councilor ,Prakash ,
× RELATED உடல் உறுப்புகளை தானம் செய்த வாலிபரின் உடலுக்கு சார் ஆட்சியர் அஞ்சலி